பக்கம்:நூறாசிரியம்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கச

8. திண்ணுதல் = திணிதல்; திண்மையுடையதாதல் (பாட்டு 16:6)

தண்ணினுந் தண்ணுக; மண்ணினுந் திண்ணுக” (பாட்டு 16:6)

9. கோணூல் = (கோள்நூல்) ; கோள்பற்றிய இயல் (பாட்டு 16:உரை)

10. திண்பாடு = திணிவுறுகை; செறிவுறுதல்

“மண்போலும் திண்பாடும் “ (பாட்டு 16:உரை)

11. விழைபாடு = விருப்பப்பேறு; விருப்பம் (பாட்டு 24:உரை)

12. கள்ளிக்காய் = மிளகாய் (பாட்டு 29:2)

13. ஈனாக்கன்று: செய்கன்று. ஈன்றகன்று இறந்த விடத்து வைக்கோல் முதலிய செய்பொருள்களைக் கொண்டு செய்த பொய்க்கன்று. (பாட்டு 30:2)

14. வினைந்து = வினையைச் செய்து

“வாழில் வினைந்து“ (பாட்டு 33:2)

காட்சியழகும் ஆட்சியழகும்:சில இடங்கள்

1. தண்டிலா விழியிலி தவிப்பென” (பிற்பகுதி)

(உரை: ஊன்றுகோல் இல்லாத குருடன் செல்வழியறியாமல் தடுமாறித் தவித்தல் போல.)

2. “முன்னிளங் காலுறப் பின்கால் எவ்வி முட்ட” (பா:17:வரி:9-10)

(ஆட்டுக்குட்டிகள் பாலருந்தும் காட்சி)

உரை: இளமையான முன்னங்கால்களை நிலத்தே படிதலுற ஊன்றி, பின் கால்களால் எவ்வுதல் செய்து, தம் புனிற்றிளந் தலைகளான் செய்கின்ற முட்டுதலுக்கு)


3. “............................ முகில்திரி விசும்பிற்
கயிறாடு தொம்பர்க் கைக்கழி யன்ன

உயிராரு காதற் கூன்று கோலனை” (பா:18:வரி:3-5)
 
4. “உட்பகை நொதியும் உளத்தோர்” பா:219

“உரை: உள்ளே கொண்ட பகை நாளுக்குநாள் ஊறிப் புளிப்பேறும் தன்மைகொண்ட நெஞ்சினோர்.”

 

5. “கவண் முகத் துருவிய சிறுகல் போல
விசைப்பே அளவிடைப் பொழுதே” (பா:31:வரி:2-3)

(உரை கல்லெறி கருவியின் முனையினின்று உருவிப்போகும் சிறு கல்லைப் போலும் வாழ்க்கையில் விசைப்பு-ஓர் அளவுபட்ட சிறுபொழுதே...)

6. “தமிழ்கொல் தில்லி” (பா:32:7)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/16&oldid=1251506" இலிருந்து மீள்விக்கப்பட்டது