பக்கம்:நூறாசிரியம்.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

239


மயர்தீர் கொள்கை -குற்றமற்ற கொள்கையை உடைய சான்றோர் அழுங்க சான்றோர்கள் வருந்தும்படி

குற்றமற்ற நடுவு நிலையுள்ள சான்றோர் பலர், மாணவர்கள்மேல் அடக்குமுறை செய்து அவர்களைக் கொல்லற்க என்று வேண்டியும், அவர் மொழி கேளாது, அவர்கள் நெஞ்சம் துயருறும்படி கொல்வித்தான் என்பது.

உயர்செந்... நின்றாரை - உயரிய செந்தமிழ் மொழிக்குக் காப்பென நின்றவரை.

வெய்வேட்டெஃகம் விதிர்ப்பறத் தாங்கி - கொடிய துமுக்கிகளை நடுக்கமிலாது தாங்கி,

கொய்துயிர்...கோலே உயிரைக் கொய்து துண்டித்தது ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த கொலைஞனின் கொடுங்கோல் ஆணை.

புன்றலைச் சிறாஅர்- இளமைத் தலைகளையுடைய சிறுவர்களின்.

செந்நீர் ஆடியோன் - குருதியில் குளித்தவன்.

முந்நிற நெடுங்கொடி - கோட்டையின் நீண்ட கம்பத்தில் கட்டப்பெற்ற மூன்று நிறமுள்ள பேராயக் கட்சியின் கொடி

முன்றிலும் சிதைக - அக்கொடியுடன் அவ்வரசின் ஆளுகை முற்றமும் சிதைக. முன்றில் - சிதைதல் என்றது அவ்வரசின் ஏற்றம் சிதைக என்பது.

அன்னோன் தாங்கிய அரசும் சிதைக- அவ்விளைஞர்களைச் சுடுவித்த முதலமைச்சர் ஏற்று நடத்திய அரசும் இனி உருக்கொளாதபடி சிதைந்தொழிக என்றவாறு. இது வஞ்சினம். முதலமைச்சர் சார்ந்து நடத்திய அரசு பேராயக் கட்சி யரசு. முதலமைச்சர் திருபக்தவச்சலம். இவ்வஞ்சினப் பாடல் வெளிவந்த பின்னர் அவர் அரசாட்சி அவ்வாறே சிதைந்தது. மீண்டும் அவர், அரசுக்கட்டிலேறும் வாய்ப்பின்றியே போனார்.

முற்றா இளவுயிர் - முதிராத இளைஞரின் உயிர்.

தமிழ்க்கெனப் போக்கி-இந்தியழிப்பினின்று தமிழைக் காப்பதற்கென்று போராடி உயிர்விட்டு.

வற்றா நெடும்புகழ் - வற்றுதல் இல்லாத நீண்ட நெடிய புகழ்.

வழி வழிக் கொண்ட - தொன்மைக் காலத்திலிருந்து இன்று வரை வழி வழியாகக் கொண்ட

இளையோர் காத்த எந்தமிழ் - இளைஞரால் காக்கப்பெற்ற எம்முடைய தமிழ்மொழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/265&oldid=1223556" இலிருந்து மீள்விக்கப்பட்டது