பக்கம்:நூறாசிரியம்.pdf/300

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

நூறாசிரியம்

கூடல்மறுகு - ஒன்றுக்கு மேற்பட்ட தெருக்கள் இணையும் இடம். முச்சந்தி. நாற்சந்தி ஆகிய இடம்.

பொய்யுடல் இருந்து இல்லையாகிவிடும் உடல் பொய்த்தல் இல்லை என்றாதல்.

புறம் மாறி . ஒரிடத்தினின்று வேறு இடத்திற்கு மாறிப் போதல்

மெய்யுடல்- இருக்கும் உடல் புகழுடல்,

உயிரானது இருந்த உடலினின்று கழன்று, என்றும் இருக்கும் புகழ் உடலில் புகுதல்.

புகு புகல் (துழைதல், சொல்லுதல்). புகழ். உயிர் உடல் மறைவுக்குப் பின், நுழைந்து வாழும் உடல் என்றும் புகன்று கொண்டிருப்பதற்கு உரிய தன்மையானும், புகுந்து வாழும் தன்மையானும், புகல் என்னும் சொல் உயர்வு சிறப்பெய்தி புகழ் என்னும் நிலைசிறப்புச் சொல்லாய்த் திரிந்தது. வினைச்சிறப்பு நிலைபற்றி, எழுத்துச் சிறப்புப் பேறு பெற்று, நிலைத்த சொல்லானது. சொற்கள் தம் தம் வினைகளுக்குரிய முறையில் உருமாறுதல் சொற்பிறப்பியல் கோட்பாட்டில் ஒருவகை என்க.

மிளிர்தல் - மின்னுதல், ஒளிர்தல், மின் எனும் வேரடியாகப் பிறந்த சொல்.

தமிழ் உணர்வு முற்றிய உள்ளத்தின் துணிவையும், அலைபுலை கொற்றத்து விளைவையும், உயிரின் காழ்ப்புத் தன்மையில் அது தன்னை இடம் பெயர்த்துக் கொள்ளும் வலிவையும், கொள்கைக்கென உயிர்பெயர்தல் உவகை தருவது என்னும் உயிர்முதிர்ச்சித் தன்மையையும் இப் பாடலுள் கண்டுகொள்க.

இப்பாடல் முன்னது திணையும், கன்னெய் ஆடல் என்துறையும் என்க.

திணையும் துறையும் புதியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/300&oldid=1209145" இலிருந்து மீள்விக்கப்பட்டது