பக்கம்:நூறாசிரியம்.pdf/446

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

நூறாசிரியம்

பொன்றிய சிதடன் போல்கை யானே! 20
யாண்டுகொண் டொளிக்கு மவன்பெறு வைப்பே;
பொல்லாக் கேண்மையின் புல்லுரை மகிழ்ந்து
நல்லார்க் கழன்ற நெஞ்சன்
எல்லார்க்கு முறுகரி இழந்த ஞான்றே!

(தமிழ் நிறீஇச் சான்றோர்ப் புரக்கவென்று அறங்கூறி அமைய, இசைந்து மாறிய புதுவைச் செல்வன் ஒருவனை, அவனுழை யிருந்து தணந்த காலை, முன்னிலைக் கேங்கிப் பின்னிலைக் கிரங்கிப் பாடியது)

5

ஊன்றிய வித்தே உள்ளி டயின்று
தோன்றித் துலங்கிய பயனின் றொழியின்
மீட்டும் அதுபோல் நாட்டுவ திலரே!
தந்திறம் பிறர்க்கு நல்கா தாரை
எந்திரப் பாவையின் இயக்கம் என்னா 5
மயங்குவ ரன்றி மனப்பொறி மாண்டு
வயங்குபுலன் பெற்றார் என்னலும் வழுவே!
வித்தின் விரிந்த தத்துயிர்ப் பொருளே!
தத்துயிர்த் தோன்றிய எத்துவ வெளியே!
அவையிற் றெழுந்தன் றலைவுறு மாவே! 10
ஒவ்வொரு திரிபிற் கொவ்வொரு பொறியே!
செவ்விதின் இயல்நிலை எனவிரு திணையும்
தந்திறம் வழங்கித் தம்பிறப் பறிப்ப!
முந்தை விரிவின் முடிவிற் றோன்றிய
மாந்தர் பலரே மன்றிறம் பேணா 15
துயிர்த்தலு முண்ணலு முடுத்தலு மாகிப்
பயிர்ப்பறப் பிறப்பின் பயன்காட் டாரே!
வித்துக் குறையோ விளைநிலக் குறையோ
எத்திற மருங்குந் தோன்றப்
பத்துத் துலக்கமும் பழுநிய நிலைக்கே! 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/446&oldid=1234691" இலிருந்து மீள்விக்கப்பட்டது