பக்கம்:நூறாசிரியம்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

39


9 தமிழ்கமழ் உள்ளம்


விழைவே வேண்டலின் நனிகுறை வினதே!
பிழைப்பே வழுக்கிலா முறைபிறழ் விலதே!
உழைப்பே தமிழ்கமழ் உள்ளத் துன்றியோ
ரிழைபுறஞ் செல்லா நிலைபொருந் துதலின்
இழிவழிப் பொருட்குப் பழிகாண் பதுவே!
காதற் பூணலாக் கடுகிழை பூணா
ஆதுணை புரக்குங் குடும்போ பெரிதே’
வரவே யொருமுழப் பீறல் வரைத்தே!
நிரப்பே நெடுந்தொளை வாடையி னேர்த்தே!
வாழ்வே நளிர்த்த வல்லிருள் முயக்கில்
கூனித் தாழ்ந்த கூரையு ளோதத்து
முழத்துணி மெய்ம்மேன் முன்னும் பின்னும்
இழுத்திழுத் தழுங்கு மியல்பி னொத்தே!
உறவே பொருட்குக் கையகன் றேந்திக்
குறையக் கரையும் புரைகாய் வதுவே!
அயலே குய்ப்புகை பிறமனை யணுகா
தியங்குதாழ் செறிக்கு மியல்பின தளியே!
ஊரே ஆளுநர்க் குளங்கவ லாது
சீர்மை நூறும் சிறுமைத் ததுவே!
ஈங்கிவ் விடையிலெம் உயிரே
போங்குறி யறியாக் கானிர்ப் புணையே!

பொழிப்பு :

எம் விருப்பம் எமக்குற்ற தேவையினும் மிகக் குறைவினது. எம் பிழைப்பு வழுக்கலிலாத நெறி முறையிற் பிறழ்ச்சி ஏதும் இலாதது; எம் உழைப்பு தமிழ் கமழ்கின்ற உள்ளத்தே ஊன்றி, ஒர் இழைதானும் புறத்தே செல்லாத நிலையிற் பொருந்துதலின் இழிந்த வழி வரும் பொருளுக்குப் பழி கண்டு விலகும் தன்மையது; அன்பு எனும் அணிகலனன்றிப்பிறிதோர் அணியைக் கடுகளவு தானும் பூணுகிலாத, எமக்கு ஆய துணைவி புரந்து வரும் குடும்பமோ பெரிது. எமக்கு வரும் வரவோ கிழிசல் உடைய ஒரு முழப் பீறல் போன்றது. எமக்குற்ற வறுமையோ, நெடிது தொளைக்கின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/65&oldid=1181079" இலிருந்து மீள்விக்கப்பட்டது