பக்கம்:நூறாசிரியம்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

நூறாசிரியம்


அருள்பொழி நெஞ்சத்து அறம்- அருள் நோக்கான் பொழிவுற்ற நெஞ்சத்தின் அறக்கொள்கை

தயிர்கடை - பிரிவு - தயிர் மத்தால் அலப்புறல் போல், தமிழர் பாவேந்தர் பிரிவால் அலப்புற்றனர் என்க. தயிர் அலப்புற வெண்ணெய் திரளுதல்போல், பாவேந்தர் பிரிவால் அலப்புறும் தமிழர் நெஞ்சத்து விடுதலை திரளுதல் என்பதைக் குறிப்பால் உணர்த்தியபடி

உள்ளமும் அறிவும் ஒய்ந்த கள்ளமில் உணர்வு- உள்ளத்தாலும் அறிவாலும் நிலை நின்று இயங்கும் கள்ளமற்ற நடுநிலையான உணர்வுடையோர்.

கள்ளமில் உணர்வின் கணிபுநர் தமக்கு எவர் கொல் துணையே என்று கூட்டுக

- பாவேந்தர் தமிழரிடைப் பிறந்து மொழியாலும், இனத்தாலும் அவர் மறுமலர்ச்சி யுறும்படி ஓர் உணர்வுப் புரட்சியைத் தோற்றுவித்து மறைந்த நிலையில், இனி அவலமுற்ற தமிழினத்திற்கு உற்ற துணை எவரோ? எனக் கவன்று பாடியது. புரட்சி தோன்றிய நிலையில் மறைவுறின் அது முடிவுறுதல் யாங்வனோ? எவர் துணைக் கொண்டோ? என அரற்றியது மாகும்.

இது பொதுவியல் என் திணையும் கையறுநிலை என் துறையுமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/84&oldid=1181345" இலிருந்து மீள்விக்கப்பட்டது