பக்கம்:நூறாசிரியம்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

நூறாசிரியம்


புனல் வார் கண் - நீர் வழிந்த கண்.

கையறுதல் - செயலற்றுப் போதல். கழைமென் தோளி - இள மூங்கிலை ஒத்த மென்மையான தோள்களை உடையவள்.

உறுநாள் - இனி வருதலுற்ற நாள். எதிர் உறும் நாள். மறுமணம் - மீட்டும் ஒரு மணம் புணர்த்தீம்-புணர்த்துவீர்-செய்வீர் என்றபடி

மனை வாழ்வோர்-மனைக்கண் வாழ்தலை மேற்கொண்டு விளங்குவோர்.

நீவிர் எல்லாரும் மனைக்கண் வாழ்தலை மேற்கொண்டொழுக, இவ் விளையாள் மட்டும் நூம்மோடு இருந்து கொண்டே வாழாமை மேற்கொண்டு கைம்மை நோற்றல் பொருந்தாது என்றபடி

கழி இளமைப் பருவத்தே கணவனை இழந்தாள் ஆகையால் இவள் மணமின்றி, இல்லற இன்ப நுகர்ச்சி துறந்து வாழல் பொருந்தாது என்று கூறி, இவளுக்கு மேலும் மணம் செய்வித்தல் வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியதாம் இது. கணவனை இழந்தார் இளம் பருவத்தினரேனும் கைம்மை நோற்றல் வேண்டும் என்ற ஆரிய வழக்கை அழித்துக் கூறியதாம் இக்கூற்று. இவள் இங்ஙனமே மணமின்றி வாழுதல் இயற்கைக்கும், உடலியலுக்கும் மாறுபட்டதாம் என்று வலியுறுத்தியதாகும் இப் பாடல்.

இது பொதுவியல் என் திணையும், முதுபாலை என் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/90&oldid=1181787" இலிருந்து மீள்விக்கப்பட்டது