பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. வ. அவர்களது மணிமொழிகள் 1. அக்கியர் ஆகிவிட முடியுமா? "இலங்கையின் செழிப்புக்கும் சிறப்புக்கும் காரணம் தமிழருடைய முளையுழைப்பும் கைகால் உழைப்புமே ஆகும். ஆனல் மூளையால் உழைக்கின்றவர்கள் நன்ருக வாழ்கின் ருர்கள், கைகால் கொண்டு உழைக்கின்றவர்கள் வறுமையால் வாடுகின்ருர்கள். சிங்களரோ பொருமைப் படுகின்ருர்கள்; தாமும் உயர்ந்த தொழில்களையும் வியாபாரத்தையும் கைப் பற்ற முயல்கின்ருர்கள். தமிழரும் சிங்களரும் ஒத்துப் போக லாம்; இருவர்க்கும் அந்த மண் சொந்தம். சிங்களர்க்குப் பிறப்பால் உரிமை உண்டு என்ருல் தமிழர்க்கு உழைப்பால் உரிமை உண்டு. பல தலைமுறைகளாகவே தமிழர்கள் அங்கு குடியேறி வாழ்ந்தவர்கள். அந்தத் தமிழர் உயர்ந்த மொழி பேசுவதாலும் சிறந்த அறிவு பெற்றிருப்பதாலும் திடீரென்று இன்று இலங்கைக்கு அந்நியர் ஆகிவிட முடியுமா?" -யான் கண்ட இலங்கை 2. அழியா வாழ்வு "தமிழன் எப்படியாவது காலத்தை உணர்ந்து மாறுதல் களை உணர்ந்து வாழ்ந்தால் போதும், காலம் அறிந்து இடம் அறிந்து குழல் அறிந்து வாழத் தெரியாத காரணத்தால்" அன்னப் பறவையின் இனம் ஏறக்குறைய அழிந்து விட்ட தாம்; யானையின் இனமும் அழிந்து கொண்டிருக்கின்றதாம். தமிழனும் அப்படிப்பட்ட கண்மூடி வாழ்வு வாழாமல் தன் வாழ்வை மாற்றி அமைத்துக் கொண்டால் போதும். அன்னம் போலவும் யானே போலவும் உயர்ந்த வாழ்வு வாழ்ந்து புலவரால் பாடப்பட்டால் போதுமா? அப்படி வாழ்ந்து அழிந்து போவதைவிட எறும்பு போலவும் காக்கை போலவும் அழியா வாழ்வு பெறுவதே நல்லது. எறும்பும் காக்கையும்