பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்த இடத்திற்கும் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்றபடி உண்டு வளர்ந்து வாழவில்லையா? வாழ்க்கைப் போராட்டத் தில் யானையும் அன்னமும் தோற்றுப் போக, எறும்பும் காக்கையும் வெற்றி பெறவில்லையா?” - அன்னைக்கு 3. அறத்தின் அடிப்படை "தனி மனிதனின் வாழ்க்கைக்கு உணவும் உறக்கமும் இருந்தால் போதும். ஆனல் மக்கள் பலர் கூடி வாழும் சமு தாய வாழ்க்கைக்கு அறம் கட்டாயம் வேண்டும். அத்துடன் மக்கள் எல்லோரும் கூடி நடத்தும் அரசியலுக்கு அறம் சிறப் பாக வேண்டும். உடம்பின் நன்மைக்கு இரத்த ஒட்டம் எப்படிக் கட்டாயம் வேண்டுமோ, அதுபோல உலக நன் மைக்கு அறத்தின் அடிப்படை கட்டாயம் வேண்டும். அறம் யாரோ சில துறவிகளின் பேச்சு என்பது போய், வாழ்க்கைச் சட்டம் என்னும் தெளிவு வேண்டும். அரசியல் அல்லல் விளைப்பதெற்கெல்லாம் முதல் அறமாகிய அடிப்படை யைப் புறக்கணிப்பதுதான் என்று உணரலேண்டும். -அறமும் அரசியலும் 4. அறிஞர் பெர்னட்ஷா

  • அஞ்சாமை

கவலை இன்மை கலை உணர்வு அறிவின் தெளிவு இவையே ஷாவின் வாழ்க்கை." -அறிஞர் பெர்குட்ஷா 5. அன்பின் நெறி ச.அன்பாய் ஒன்றுபட்டுக் கணவனுடன் வாழ்ந்து இல்லறம் நடத்தும் மனைவி, அவனிடம் உள்ள சிறு குறைகளே மறந்தும் மறைத்தும் வாழ்தல் இந்நாட்டுக் குடும்பப் பண்பாடுகளில் 96