பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை "நூலகவியல் சிந்தனைகள்” என்னும் தலைப்புடைய இந் நூல் ஒரு கட்டுரைத் தொகுப்பாகும் இத்தொகுப்பில், ஆய்வு உதவு நூலகர், ஆராய்ச்சியாளர்க்குப் பாரதி, உரோமாபுரிப் பழம்பெரும் நூலகங்கள், ஒரே ஒரு ஊரிலே, கல்லூரி நூலகம், தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் மு. வரத ராசனர், சிறுவர் நலச் சிந்தையனையாளர், பள்ளி நூலகம், இலக்கியத் தொண்டர் கலைஞர் ஆகிய ஒன்பது கட்டுரைகள் உள்ளன. அத்துடன் ஆங்கில-தமிழ் நூலகவியற் சொற் பட்டி ஒன்று இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஏற்கெனவே தமிழ்ப்பணி', 'அமுத சுரபி" முதலிய இதழ்களில் வெளிவந்தனவாகும். அவற்றை வெளி யிட்ட இதழ் ஆசிரியர்களுக்கு நான் இதுகால் நன்றி தெரி விக்கின்றேன். கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடுவதற்கு அனுமதி வழங்கிய சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு வினர்க்கும், சிறப்பாக அதன் துணைவேந்தர், கல்விநெறிக் காவலர், தாமரைத் திரு நெ. து. சுந்தரவடிவேலு, M.A., L.T. அவர்களுக்கும் நான் என்றென்றும் கடப்பாடுடையேன். பல சிரமங்களுக்கிடையே இந்நூலினைப் பாங்குற வெளி யிடுவதற்கு ஒல்லும் வகையெல்லாம் உழைத்த பெருங் கவிக்கோ புலவர் வா. மு. சேதுராமன் அவர்களை நான் மனமாரப் பாராட்டுகின்றேன். இந்நூல் உருவாவதற்கு உடனிருந்து உதவிய புலவர் திரு. இரா. நடராசன், M.A., அவர்களுக்கும், திரு. நா. சொ. சோமசுந்தரம், B.Sc., அவர் களுக்கும், புலவர் திரு. பா. ஆவுடைநாயகம் அவர்களுக்கும் எனது பாராட்டினை நான் இதுகால் தெரிவிக்க விரும்பு கின்றேன்.