பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்ருகும். குற்றத்தை உடனே எடுத்துரைத்துக் கடிதல் அல்லது துாற்றுதல் உரிமையின் பயனகக் கொள்ளப் படலாம். ஆனல் அதனைப் பொறுத்தலும் மறத்தலும் மறைத்தலுமே அன்பின்நெறியாகும்.' -குறுக்தொகைச் செல்வம் 6. ஆண் பெண் வாழ்க்கை "ஆணின் வாழ்க்கை வெளியே பலரோடு பழகித்திரியும் வாழ்க்கை. பலரோடு பழகுவதால் மனம் கெடுவதற்கு வாய்ப் புண்டு. ஒழுக்கம் கெடுவதற்கும் வழி உண்டு. சேற்றில் நடந்து வழுக்குவது போன்றது. அது. பெண்ணின் வாழ்க்கை குடும்பத்தளவில் பெரும்பாலும் இருந்து, கணவனேடும் மக்க ளோடும் பழகி அமையும் வாழக்கை. மனம் கெடுவதற்கும் வாய்ப்பு இல்லை. ஒழுக்கம் தவறுவதற்கும் வழி இல்லை. மண லில் நடப்பது போன்றது. இது. ஆகையால் தவறி விழவே கூடாது.” -அகல் விளக்கு 7. ஆரவாரம் வேண்டாம் "நாட்டுக்கும் மாணவருலகத்திற்கும் நன்மை செய்ய விரும்புகிறவர்கள், மாணவர்களைக் கருவியாக்கிப் புகழ்பெறும் ஆசையை விடவேண்டும். மாணவர்கள் சிறு கூட்டங்களா கக் கூடி ஆராய்ச்சி நடத்த வேண்டுமே அல்லாமல், பெருங் கூட்டங்களாகக் கூடி ஆரவாம் செய்யக் கூடாது என்று கூறி, அக் கூட்டங்களுக்குச் செல்ல மறுக்க வேண்டும். இல்லை யால்ை ஒரு பக்கம் புகழாசையின் ஆரவாரத்தை விரும்பி இன்னெரு பக்கம் ஒழுங்கான கல்விக்காக ஏங்குவதாகவே நிற்கும் அந்த நிலை, கூழுக்கும் மீசைக்கும் ஆசை என்பதாக முடியும்." -கல்வி