பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. இரண்டும் வேண்டும் "இயற்கையிலிருந்து நாம் ஒரு பெரிய பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். வாழ்க்கைப் பகுதிகளில் ஒன்றை மட்டும் போற்றுகிறவன் உருப்படியாவதில்லை. உடலை மட்டும் போற்றி உரமாக வைத்திருப்பவனும் அழிகிருன். அவனுடைய உள்ளம் அவனுக்குப் பகையாகி அவனைத் தீய வழியில் செலுத் திக் கெடுத்து அழிக்கிறது. உள்ளத்தை மட்டும் தூய்மை யாகப் போற்றிக் காப்பாற்றுகிறவனும் இடை நடுவே அல்லற்படுகிருன்; அவனுடைய உடல் பல நோய்க் கிருமி களுக்கு இடம் கொடுத்து அவனுடைய உள்ளத்தில் அமைதி யைக் கெடுத்து அல்லல்படுகிறது. உடலும் வேண்டும் உள்ளமும் வேண்டும் என்ற இரண்டையும் உரமாகவும், து.ாய்மையாகவும் காப்பதே கடமையாகும்." - தம்பிக்கு 9. இலக்கிய ஆராய்ச்சி "இலக்கியம் இயற்றி உதவும் புலவர்கள் உலகத்திற்குத் தொண்டு செய்வது போலவே, இலக்கிய ஆராய்ச்சியாளரும் உலகத்திற்குத் தொண்டு செய்கிரு.ர்கள் எனலாம். இலக்கிய ஆராய்ச்சி இருவகையில் பயன் விளைக்கிறது. ஒன்று, இலக் கியத்தை அது நன்கு விளக்குகிறது; மற்ருென்று, இலக் கியத்தில் சிறந்தது, சிறப்பற்றது என்று தேர்ந்து அறிவிக் கிறது. ஆகவே, கற்கும் இலக்கியத்தை நன்ருகக் கற்கவும், தக்கதைக் கொண்டு தகாததைக் கைவிடவுடம் அது உதவியா கிறது.” -இலக்கியத் திறன் 10, இலக்கியத்தின் எதிர்காலம் "எவ்வளவு சிறப்பு வாய்ந்த இலக்கியமாயினும், அதன் எதிர்காலம், கற்கும் மக்களைப் பொறுத்தே அமைகின்றது. ஒரு புறம், அதனை ஆழ்ந்து கற்றுஉணரும் புலவரும் வேண்டும். 98