பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்ருெரு புறம். அதன் கருத்தை உணர்ந்து போற்றிப் புகழும் பொதுமக்களும் வேண்டும். பொதுமக்களின் உள்ளத்தில் இடம் பெருமல் புலவர் நெஞ்சில் மட்டும் வாழும் வாழ்வு போதாது. பொது மக்களின் புறக்கணிப்பு இலக்கியத்தின் எதிர்கால வாழ்வுக்கு இடையூருகும்." -நெடுந்தொகை விருந்து 11. இலக்கியத் தும்பிகள் "தேன் நுகரும் தும்பிகள் பாடி மகிழ்வன; கூடிக் களிப் பன. பாடாமல் இருத்தலும் அவைகளால் இயலாது; ஒருங்கே கூடாமல் இருத்தலும் அவைகளால் இயலாது. இந்த இரு பெற்றியும் இலக்கியத் தும்பிகளாகிய புலவர்க்கும் அமைந் துள்ளன. தாம் கண்ட புதிய கற்பனைகளையும் தாம் உணர்ந்த புதிய உணர்வுகளையும் பிறர்க்கு எடுத்துரைக்காமல் அமைதி யாக இருத்தல் புலவரால் இயலாது. தம் போன்ற மற்றப் புலவர் பெருக்களோடு அ ள வ ளா ம ல் இருத்தலும் இயலாது.” -கொங்குதேர் வாழ்க்கை 12. இலக்கிய வளர்ச்சி 'விதிகள் வரையறுக்கும் தன்மை உடையன. வரையறை, வளர்ச்சியுற்ற, உயிரற்ற பொருள்கட்கே பொருந்தும். இலக் கியம், உயிரினங்களைப் போல் தோற்ற்மும் வளர்ச்சியும் வாழ் வும் உடையது. ஆகவே, இவ்வாறுதான் இருத்தல் வேண்டும் என்று வரையறை செய்வது இலக்கியத்தின் வளர்ச் சிக்கும் வாழ்வுக்கும் பொருந்தாத தடையாகும். தொடக் கத்திலிருந்து வளர்ந்து மாறிவிடும் இலக்கியம் இனியும் அவ் வாறே வளர்ச்சி பெறக் கூடியது என்று மதித்துப் போற்று வதே கடமையாகும். அவ்வாறு செய்தலை விட்டு பழைய நூல்களையும், அவற்றின் விதிகளையுமே போற்றி, புது நூல்களையும் அவற் றின் நெறியையும் வரவேற்காத மனநிலையில் எல்லா நாடுகளி 99