பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லும் உண்டு. இறந்த காலத்தைப் போற்றி நிகழ் காலத்தை நெகிழவிடும் இந்த மனப்பான்மை இலக்கிய வளர்ச்சிக்குப் பொருந்துவதன்று.” -இலக்கிய மரபு 13. இலக்கியம். இலக்கணம்-மொழியியல் "இலக்கியம் என்பது மொழியின் நிலை பெற்ற வாழ்வு. இலக்கணம் என்பது மொழியின் இறந்த கால நிலையை விளக்கி நிகழ்கால நிலையைச் சொல்ல முயல்வது. மொழியியல் என்பது மொழியின் வரலாற்றை விளக்குவதோடு நிகழ்கால நிலையைத் தெளிவாக்கி எதிர்காலப் போக்கையும் அறிவிக்க வல்லது." --மொழி நூல் 14. உண்மைத் தொண்டு தொண்டுகளில் தலையான தொண்டு வறுமையும் பாவமும், அறியாமையும், மூட நம்பிக்கையும் நாடி உதவுவது அன்று; அவற்றிற்குக் காரணமான உலக அமைப்பை மாற்று வதே ஆகும். வறுமை முதலியவற்றை ஈகை முதலியவற்ருல் ஒழிக்க முனைந்தால், அந்தத் தொண்டு ஒரளவு பயன்படும் ; ஒரு சிலருக்கே பயன்படும்; உலக இருளை நீக்க ஒரு வீட்டில் அல்லது சில வீடுகளில் விளக்கு ஏற்றுவது போதுமா? இராக் காலத்தையே மாற்றிப் பொழுது விடியச் செய்து ஞாயிறு தோன்றிக் கதிர் பரப்ப வேண்டாவா? ஒரு சிலர் உயரவும், பலர் தாழவும் காரணமான அமைப்பு முறையினை மாற்றியமைக்கத் தொண்டு செய்வதே தலையான தொண்டு. மற்றத் தொண்டுகளும் தொண்டுகளே. ஆனல் இதுவே அடிப்படையான தொண்டு ; நிலைமான தொண்டு; உண்மைத் தொண்டு.” -திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் 100 -