பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. உணர்ச்சியும் அறிவும்

  • மனிதன், அறிவுக்கு உரிய மூளையோடு மட்டும் பிறக்க வில்லை; உணர்ச்சிகளும் கற்பனைகளும் கூடிய மனத்தோடும் பிறந்துள்ளான். ஆகவே, உணர்ச்சி அறிவு இரண்டும் வாழ்வுக்குத் தேவையானவை. இரண்டையும் ஒருங்கே வளர்த்தல் வாழ்வுக்கு நலம் செய்யும். ஒன்றை மட்டும் வளர்த்து மற்ருென்றைப் புறக்கணித்தல் , வாழ்வைக் கெடுக்க வல்லதாகும். அறிவை மட்டும் வளர்த்துக் கலைகளின் வாயி லாக உணர்ச்சியைப் பண்படுத்தாமல் விட்டால் மனிதன் யந்திரம் போன்றவன் ஆவான்; சில வேளைகளில் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த அறியாமல் தடுமாறுவான். உணர்ச்சியை மட்டும் வளர்த்து அறிவைப் புறக்கணித்தால், நடுநிலையான ஆராய்ச்சி செய்யும் ஆற்றலை இழந்து விடுவான்; நன்மை தீமையை ஆராய்ந்து உண்மை காணும் தன்மை இல்லாமல் வெறியோ ஒருதலைச் சார்பான போக்கோ உடையவன் ஆவான்."

-இலக்கியத்திறன் 16. உணவுப் பஞ்சம் தீர

  • ’ ஒரே வழி! உழவன் நிலையை-உழவன் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும். உழவன் மாட மாளிகையில் வாழ்வதை, உயர்ந்த ஆடைகள் உடுத்து இன்பமாகத் திரிவதை, கடன் இல்லாமல் கவலை இல்லாமல் களிப்புறுவதைக் காணும் நிலைமை வரவேண்டும். அன்று படித்தவர்கள், பட்டதாரிகள், விஞ்ஞானிகள், திறமையுள்ளவர்கள், செல்வாக்குள்ளவர்கள் எல்லாரும் உழவுத் தொழிலை நாடி வயலை வளம் பெறச் செய் வார்கள். அன்றுதான் விஞ்ஞானக் கருவிகள் உழவுக்குப் பயன்படும்; உழவனுக்கும் உயர்ந்த இடம் கிடைக்கும். என்று தான் எங்கும் தரிசு நிலம் காணுமல், பயிர் பச்சையே காணப் படுமோ, அன்றுதான், “உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ என்னும் உண்மை விளங்கும். அன்றுதான் உணவுப்

பஞ்சத்தை நிலையாகத் தீர்க்க முடியும்." -அரசியல் அலைகள் 101