பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யவேண்டிய கடமையும் உள்ளது" என்ற மனப்பான்மை வளர்ந்தால் உலக அமைதிக்கு வழி உண்டு." -அக்த நாள் 20. எல்லாரும் ஒடுகிருர்கள் "உலகம் பெரிய ஒட்டப் பந்தயம் நடக்கும் இடமாக உள்ளது. சமுதாயம் நடத்தும் இந்த ஒட்டப் பந்தயத்தில் எல்லாருமே ஒடுகிரு.ர்கள். பிச்சைக்காரர் முதல் துறவிகள் வரையில் எல்லாருமே வருகிருர்கள். யார் நிறையச் சேர்த்து வைக்கிருர்களோ அவர்களுக்கு வெற்றி உண்டு என்று பரிசு தருகிறது சமுதாயம். பரிசு பெற எல்லாரும் முயல்கிருர்கள். பணம் சேரச் சேர வாழ்வு எளிதாகிறது. அதனால் எல்லாரும் ஒடுகிருர்கள்.” -கண்பர்க்கு 21. எளிமையும் அருமையும் 'உலகத்தை அடக்கி ஆள்வது எளிமை; உள்ளத்தை அடக்கி ஆள்வது அருமை. இது அரசியல் தலைவர்களின் வாழ்க்கையால் அறிந்த உண்மை. உலகத்தின் பரப்பைக் கண்டு அறிவது எளிமை. உள்ளத்தின் பரப்பை அளந்து அறிவது அருமை. இது அறிவியல் தலைவர்களிடம் உணர்ந்த உண்மை. உலகத்தை எழுதிக் காட்டுவது எளிமை; உள் ளத்தை எழுதிக் காட்டுவது அருமை. இது கவிஞர்களிடம் கண்டு தெளிந்த உண்மையாகும்.” -மணல் வீடு 22. கலைத் தொழில் மெய் உணர்ந்த அறிஞர்க்கு இன்பம் துன்பம் என்பவை வாழ்க்கைக் கடலின் இரு வகை அலைகள். அவர்கள் அவற் றிடையே அமைதியாகக் குளித்து எழுவர். மற்றவர்க்கு இன்பமும் துன்பமும் வாழ்வின் இரு நிலைகள். அவர்கள் ஒன்றைக் கண்டு ஓங்கியும் மற்ருென்றைக் கண்டு அஞ்சியும் 103