பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயங்குவர். கற்பனை சிறந்த புலவர்க்கோ அவை இரண்டும் விளையாட்டுப் பொருள்கள். இரண்டையும் படைத்துப் படைத்து விளையாடுவதே அவர்களின் கலைத் தொழில். -புலவர் கண்ணிர் 23. காதல் "காதல் ஒர் உயர்ந்த பண்பாகும். வாழ்க்கையில் பல படிகள் உண்டு. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் துணை யாக நாடி வாழும் படிக்கு இன்றியமையாதது காதல். அந்த நிலையில் மனம் மிக வேகமாக வளர்ந்து பண்படும். அவ்வாறு காதலால் பண்பட்டு வளரும் மனத்தில் அஞ்சாமை மிகும். தன்னலம் குறையும். துன்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெருகும்." றுந்தொகைச் செல்வம் 24. காதல் வாழ்வு "அந்த முருங்கை மரத்திலிருந்து இரண்டு கிளிகள் ஒன்றன்பின் ஒன்ருக எழுந்து பறந்தன. அவை தென்னை மரத்தில் சென்று ஒலையில் மறைந்திருந்தன. உடனே சிறிது நேரத்தில் வெளிவந்தன. தென்னே மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பறந்து மறுபடியும் முருங்கைக் கிளையில் உட்கார்ந்து கொஞ்சின. அதுதான் வாழ்வு, காதல் வாழ்வு. காவியமாக இருந்தால் என்ன? அல்லது உலகமாக இருந்தால் என்ன? பாட்டாக இருந்தால் என்ன? அல்லது, உடம்பாக இருந் தால் என்ன? அவற்றில் இரண்டு உள்ளம் வேண்டும். ஒன்று அமைதி உள்ளம்; ஒன்று ஆற்றல் உள்ளம். அமைதி ஆற்றல் பெற வேண்டும். ஆற்றல், அமைதி பெறவேண்டும். உயர உயரப் பறக்கலாம். தாழத் தாழ வரலாம். ஏற்றத் தாழ்வு அவற்றில் இல்லை. இரண்டு உள்ளம் ஒன்றுபட்டு உணர்தல்தான் வேண்டியது. அதுதான் அந்தக் கிளிகளின் 104