பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வு. உள்ளம் இரண்டு ஒன்றுபட வேண்டும். அவ்வளவு தான் காதல் வாழ்க்கை." -செந்தாமரை 25. காந்தி அண்ணல் "நம்மைப்போல் குறைகளோடு பிறந்தார்; முயன்று முயன்று குறைகளைப் போக்கிக் கொண்டர். நம்மைப்போல் புலன்களுக்கு அடிமையாக வாழ்ந்தார்; படிப்படியாகப் புலன்களை வென்று வென்று வீரரானர். நம்மைப்போல் துன்பங்களுக்கு நடுவே, குழப்பங்களுக்கு நடுவே நொந்தார். மெல்ல மெல்ல நெஞ்சில் உரம் வளர்ந்து உயர்ந்தார். நம்மைப்போல் இல்வாழ்க்கை வாழ்ந்தார்; உள்ளத் துாய்மை யால் பற்றற்ற பெருந்தன்மையோடு உலகத் தொண்டு செய் தார். நம்மைப்போல் அழியும் உடல் பெற்று வாழ்ந்தார்: ஆனல் அது மறைவதற்கு முன் அரிய பெரிய செயல்களைச் செய்து முடித்தார். ஆகையால், அவர் சென்ற நல்வழியைப் பின்பற்றினல் நாமும் உரம் பெறமுடியும், உயர்வு பெற முடியும் என்ற நம்பிக்கையே நமக்குத் தோன்றுகிறது.” --காந்தி அண்ணல் 26. குருவிகளின் ஊடல் 'வீட்டினுள் இறப்பில் வாழும், ஆண்குருவி வேறு இடத்துத் துணையோடு தங்கியிருந்து வந்தது. ஈங்கைமலர் போன்ற தன் சிறு குஞ்சுகளோடு கூட்டினுள் இருந்த பெண் குருவி, அதை அறிந்து கூட்டினுள் புகாதவாறு கடிந்தது. அதல்ை ஆண்குருவி மழைத் துவலையால் நனைந்த முதுகோடு பக்கத்தே நடுங்கியபடி இருந்தது. கடைசியில் பெண்குருவி அருள் கொண்டு பெரிதும் எண்ணி அன்பான நெஞ்சத்தோடு தன்னிடம் வருமாறு அழைத்துக் கொண்டது." 27. குழந்தை உலகம் "குழந்தை என்ன விரும்புகிறதோ, அதைச் செய்தால் போதும். என்ன கேட்கிறதோ அதைக் கொடுத்தால் 105