பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போதும். குழந்தை பெற்றேரின் முத்தத்தை ஒருநாளும் கேட்பதே இல்லை. நம் ஆசைகளைக் குழந்தையின்மேல் திணிப்பது அநாகரிகம். குழந்தையின் நல்ல ஆசைகள் நிறைவேறும்படி, நாம் சிறிது துன்பப்பட்டாவ து வளர்ப்பது தான் நாகரிகம். மனிதன் செடி கொடிகளை உரிமை கொடுத்து வளர்க்கிருன். ஆனல் குழந்தைகளை அவ்வாறு வளர்க்கக் கற்றுக்கொள்ளவில்லை." -குழந்தை 23. கோணல் வளர்ச்சி "ஏழை மக்கள் வாழ்வுக்கு ஒரு தொழிலும் அதனல் வயிற்றுக்கு உணவு முதலியனவும் பெற்று வாழ முயல் கிருர்கள். அவர்களின் உரிமை வேட்கை இவ்வளவே. இந்த அடிப்படை உரிமையும் இல்லாமல் துன்புறும் நிலைமை அவர் குளுக்கு நேரும்போது, அவர்கள் அடங்கி, ஒடுங்கி அழிந்து விடுவதில்லை. இந்த உரிமை வாழ்வுக்கும்-வாழ்வுக்கு அடிப்படையான தொழில், உணவு, உடை, வீடு முதலிய வற்றைப் பெற்று வாழும் எளிய வாழ்வுக்கும்-வழி இல்லாமல் அவர்களை ஒரு சமுதாயம் கைவிடுமானல், அப்போது அந்த ஏழைமக்கள் என்ன ஆகின்ருர்கள்? நல்லவர்களாய், மனச் சான்று உடையவர்களாய், நாட்டுக்கு உழைப்பைத் தந்து உதவ வல்லவர்களாய் வாழ விரும்பிய அவர்களின் போக்கு நேர்மாருக-செடியின் கோணல் வளர்ச்சிபோல் மாறி விடுகின்றது." -காட்டுப் பற்று 29. சமுதாயக் குற்றம் "ஏற்றத் தாழ்வான வாழ்க்கைகள் அடுத்தடுத்து இருக்கு மாறு செய்வதைப் போன்ற சமுதாயக் குற்றம் வேருென்றும் இல்லை. சட்டமே இன்று இந்தக் குற்றத்தைச் செய்து வருகின்றது. அதனுல் என்ன ஆகின்றது தெரியுமா? உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு இந்த ஏழைகளைப் பற்றிய இரக்கம் குறைந்து போகின்றது. ஏற்றத் தாழ்வு இயற்கையானது. 106