பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழிக்க முடியாதது என்ற கருத்தும் ஏற்படுகின்றது. எல்லோரும் கடவுளின் மக்கள் என்ற கொள்கை போய், அவர்கள் வேறு நாம் வேறு என்ற நாத்திகப் போக்கு வளர் கின்றது. செல்வர்கள் இப்படிக் கெட, ஏழைகள் வேறுவகை யாய்க் கெடுகின்ருர்கள். ஆடம்பர வாழ்க்கை கண்ணெதிரே இருப்பதால், அதை எண்ணி ஏழைகள் ஏங்குகின்ருர்கள்; எளிய வாழ்க்கையின் சிறப்பை அறிய முடியாதவர்களாய் வருந்துகின்ருர்கள்; கிடைத்த வருவாயை உடனே கண்டபடி செலவு செய்துவிட்டுக் கையில் இல்லாத நாட்களில் வம்பும் வல்லடி வழக்கும் வளர்த்துப் பொல்லாதவர்களாய் விலங்கு களாய் மாறிவிடுகிருர்கள். அவர்கள் மேல் குற்றம் இல்லை. ஒத்த உரிமையுடைய மக்கள் இப்படி ஒருவர்க்கு ஒருவர் இடையூருக வாழும்படி இடம் தருகின்ற சட்டத்தின் மேல் தான் குற்றம். -கரித்துண்டு 30. சமூகக் கலை "நாம் வீடு கட்ட வேண்டுமானுல் நினைத்தபடி நம் விருப்பம்போல் கட்டிக்கொள்ளலாம். இன்னொருவரைப் பற்றிக் கவலைப்படாமல் நம் வீட்டை நாம் கட்டிக்கொள்ள லாம். வீடு, தனித் தனியாக அவரவர் விருப்பம்போல் அமையும் கலை; தனிப்பட்டவரின் கலை. ஆனல் மொழி அப்படிப்பட்டது அல்ல; மொழி தனிப்பட்டவரின் கலை அல்ல; எல்லோரும் சேர்ந்து ஒரு மனமாய் வளர்க்கும் கலையே மொழி. அதனல் அதைச் சமூகக்கலை என்று சொல்ல வேண்டும். -மொழியின் கதை 31. ஞானி, காத்திகன், ஆத்திகன், வீரன், அறிஞன் 'உலகத்தில் உள்ளவை எல்லாம் என் பரிணாமம் என்று உணர்பவனே ஞானி. உலகத்தில் உள்ள குறைகளை அவரவர் களின் தலைமேல் சுமத்திவிட்டுத் தான் துளயவகை எண்ணுகிற 107