பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்வாழ, தமிழகம் விளங்க, ஒன்றுபடுவீர் ... தமிழ் போகா திருக்க, தமிழகம் மறையாதிருக்க, தமிழரே! .ே வ ண் டு வ து ஒன்றுதான். அதுதான் ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமை." - மூன்று நாடகங்கள் 34. தன்னலம் "தன்னலம் உடையவரின் வாழ்க்கை எளியது; திரும்பத் திரும்பத் தன்னையே சுற்றி வருவது. ஆதலின் போராட்டம் குறைந்தது. ஆயின் தன்னலம் அற்றவரின் வாழ்க்கை அரியது; தன்னை மறந்து வீட்டையோ நாட்டையோ உலகத்தையோ சுற்றி இயங்குவது; ஆதலின் போராட்டம் மிக்கது. தன்னலம் உடையவர் எண்ணுவர்; உடனே துணிவர்; துணிந்து செய்வர்; வரும் பயன் காண்பர்; ஆதலின் போராட்டம் வரின் ஒதுங்கு வர்; ஒடுவர் அல்லது இரையாவர். தன்னலம் அற்றவர் எண்ணு வர்; தயங்குவர், அரிதில் துணிவர்; அமைந்து செய்வர்; வரும் பயன் நோக்கார். ஆதலின் போராட்டம் வரின் ஏற்பர்; எதிர்ப் பர். அல்லது மாற்றுவர் ." -ஒவச் செய்தி 35. திருவள்ளுவர் "மனம், பண்படும் இடம், காதல் வாழ்க்கை, மனம்பயன் படும் இடம், பொதுவாழ்க்கை, மனம் வாழும் இடமே தனி வாழ்க்கை. திருவள்ளுவர், காமத்துப்பாலில், காதல் வாழ்க்கையை விளக்கி, காதல் கொண்டவரிடம் கலந்தும் கரைந்தும் மனம் பண்படும் வகையைக் கூறியுள்ளார். பொருட்டாலில், பொது வாழ்க்கையை விளக்கி, அறிவின் வழி இயங்கிப் பொதுக் கடமையைச் செய்து மனம் பயன்படும் வகையைக் கூறியுள் ளார். அறத் துப்பாலில், தனிவாழ்க்கையை விளக்கி, அன்பை வளர்த்து, அறத்தைப் போற்றி மனத்துாய்மை பெற்றுவாழும் வகையைக் கூறியுள்ளார்’ --திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் 109