பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. திரு. வி. க. "திரு. வி. க. என்ருல் எவரும் மறக்கமுடியாத மூன்று தனிப்பண்புகள் உண்டு. அவை : துாய்மை, எளிமை, பொதுமை. தூய்மை: புறத்திலும் அகத்திலும், எழுதும் தமிழி லும் எண்ணும் எண்ணத்திலும் உடுக்கும் உடையிலும், உரைக்கும் உரையிலும், செய்யும் கடமையிலும், செல்லும் நெறியிலும். எளிமை: காண்பதற்கும் கேட்பதற்கும், அணுகுவதற்கும் அழைப்பதற்கும்; உபசரிப்பதற்கும் உதவி பெறுவதற்கும் குறைகூறுவதற்கும், குறைசொல்வதற்கும். பொதுமை! காந்தியடிகள் போல் பல கட்சியினர் உள்ளத் தையும் கவரும் அரசியல் பொதுமை. கார்ல்மார்க்ஸ் போல் பல மக்களையும் ஒன்றுபடுத்த விழையும் பொருளியல் பொதுமை இராமலிங்க அடிகள் போல் பல சமயநெறிகளிலும் அடிப்படை ஒன்றெனக் காணும் சன்மார்க்கப் பொதுமை, திருவள்ளுவர் போல் எக்காலத்திற்கும் இன்றியமையாத உண்மைகளை உணர்ந்து தெளியும் வாழ்வியல் பொதுமை." -திரு. வி. க. 37. தீவினை 'உலகம் கெட்டுப் போச்சு, உலகம் கெட்டுப்போச்சு என்று யார் மேலேயோ பழியைப் போடப்பார்க்கிறீர்களே! உலகத் தைக்கெடுத்ததில் உங்களுக்கும் பங்கு இல்லையா ?ஒடும் செம் பொன்னும் ஒன்ருகக் கருதிய பெரியவர்கள் போய் வழிபட்ட கோயில்களில் நீங்கள் பொன்னேயும் வைரத்தையும் வழிபட்டு வருகிறீர்கள். கோயிலிலேயே இப்படி இருந்தால், வீட்டிலே, தெருவிலே, கலியானப் பந்தலிலே, விருந்திலே எப்படி இருக் கும், பாருங்கள். பட்டு இல்லாமல், வைரத்தோடு இல்லாமல் முப்பது ரூபாய்த்தோடும் எட்டுரூபாய்ப் பருத்திப் புடவையும் உடுத்துக்கொண்டு ஒர் அம்மாள் உங்கள் வீட்டுக்கு வந்தால் நீங்கள் மதிக்கிறீர்களா ? அந்த அம்மாள் படித்தவளாக இருந் 110