பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலும் நீங்கள் மதிப்பதில்லை. ஒழுக்கம் கெட்டவளாய், கணவ உறுக்கு அமையாதவளாய், படிப்பும்பண்பும் இல்லாதவளாய் இருந்தபோதிலும், வைரத்தோடும் வைர அட்டிகையும் வைர மோதிரமும் பட்டும் ஆடம்பரமுமாக ஒருத்தி வந்தால் எழுந்து நின்று மரியாதை செய்து வணக்கமாகப் பேசுகி மீர்களே? அந்தத் தீவினைதான் இப்படி விடிகிறது." --காதல் எங்கே ? 38, துன்பத்திற்குத் துணை 'இன்பத்திற்குத் துணையாக யாராலும் முடியும்; ஈ, எறும்பாலும் முடியும். தேவையானது கிடைக்கும்போது ஈயும் எறும்பும் நம்மைக் கேளாமலே மொய்க்கின்றன. அதுபோல் இன்பம் உள்ளபோது யார் வேண்டுமானலும் வந்து மொய்த்துக் கொள்வார்கள். ஆகையால் இன்பத் திற்குத் துணையாக வல்லவரை நம்பாதே. துன்பத்திற்குத் துணையாக இருக்கும் வல்லவரைத் தேடு. உறவாலுைம் நட்பானலும் காதலானலும் இப்படித்தான் தேடவேண்டும். -அல்லி 39. கல்ல துணை வேண்டும் "நான் என் பாட்டன் போலவும், தகப்பனரைப் போல வும், மற்றவர்களைப் போலவும் காமவெறி பிடித்துத் திரிய வில்லை......அவர்கள் அந்தக் காலத்தில் உரிமையோடு வாழ வில்லை. தங்களுக்குத் தகுந்த பெண்ணைத் தேடிக் கொள்ள அஞ்சினர்கள். அதல்ை சாதிக்கும் குலத்துக்கும் கட்டுப் பட்டு, ஒழுக்கம் கெட்டு வாழ்ந்தார்கள். அறத்தை மறந்து அலைந்தார்கள். நம்பிக்கையை நடுத்தெருவில் விட்டார்கள். என் கதை வேறு. எனக்கு வேண்டியவள் வேறு. நான் வாழும் வாழ்வுக்கு ஒரு நல்ல துணை வேண்டும். நான் பேசும் பேச்சைக் கேட்பதற்கு ஒருநட்பு வேண்டும் நான் எண்ணுவது போல் சேர்ந்து எண்ணுவதற்கு ஒரு மனம் வேண்டும்." -Լ3IT 5) հM iÍÍ