பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. கல்ல நூல்கள் "சில நூல்கள் முதல் முறையாகப் படிக்கும் போது தொல்லையாகவும் இருக்கும். படிக்க, படிக்க இன்பம் பயக்கும்; வாழ்நாளில் மறக்கமுடியாத துணையாக இருக் கும்; வழிகாட்டியாக நிற்கும்; மனச்சான்றைப் பண்படுத்தும்; வழுக்கி விழும்போதெல்லாம் காப்பாற்ற முன்வரும்; நெறி தவறம் போதெல்லாம் இடித்துரைத்துத் திருத்தும், வாழ் நாளில் உயிரின் உணர்வு போல் கலந்துவிடும் ஆற்றல் அத்தகைய நூல்களுக்கு உண்டு.” -இலக்கிய ஆராய்ச்சி 41. நல்ல படிப்பு 'எந்தப் படிப்பைப் படித்தால் வாழ்நாள் முழுதும் பயன்படுமோ அந்தப் பகுதிகளை மட்டும் மனப்பாடம் செய்து வற்புறுத்தி நினைவில் இருத்தும் வகையிலே பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த முயற்சி நல்ல முயற்சிதான். மாணவர் களின் உடல் நலமூம் கெடாது. இளமையில் மாணவர்கள் வருந்தி உழைக்கின்ற உழைப்பால் அவர்கள் இளைத்துப் போகின்ற நிலையையும் காணுமல் அவர்களின் நல்ல வளர்ச்சி யைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படிப்பட்ட படிப்புத் தான் நல்ல படிப்பு என்பது தெளிவு." -கல்வி 42. கனகரிகம் 'எண்ணத் தெரிந்து அறிவைப் பெருக்கிக் கலைகளை வளர்த்துக் கருத்து வகையால் உயர்ந்த உயர்வே நாகரிகத்தின் மலர்ச்சி என்னலாம். எனவே, ஊனும் உடையும் படையும் வீடும் ஊரும் நாடும் காண்பது நாகரிகம் அன்று. அவை அனைத்தும் நாகரிக வளர்ச்சிக்குரிய கருவிகளே. கருத்தின் உயர்வே-உள்ளத்தின் உயர்வே-நாகரிகம் எனலாம்." -தமிழ் கெஞ்சம் 1 :2