பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. காங்கள் கட்டிய வீடு "எங்கள் வீடு என்ருல் எங்களுடைய உழைப்பாலேயே ஆன கூடு. நாங்களே கட்டிய கூடு. மனிதர்களாகிய உங்களுக் குள் ஏதோ சட்டம் ஒன்று இருக்கிறதாம். யாரோ வீடு கட்டு வார்களாம். பிறகு யாரோ என்னுடையது என்று சொல்லு வார்களாமே. இது அப்படி அல்ல. நாங்களே கட்டிய வீடு என்றது ஆண் குருவி.' - குருவிப் போர் 44. நான் சர்வாதிகாரி ஆளுல் "நான் சர்வாதிகாரியாக ஏற்பட்டால் திருக்குறள் ஒதாத திருமணம் தமிழ் நாட்டில் செல்லுபடி ஆகாது என்றும் தேவாரம் திருவாசகம் பிரபந்தம் முதலான தமிழ் மறை ஒதாத கோயில்கள் தமிழ் நாட்டில் திறந்திருக்கக் கூடாது என்றும், தமிழில் உத்திரவு அனுப்பத் தெரியாத பட்டதாரிகள் தமிழ் நாட்டில் அதிகாரிகளாக இருக்கக் கூடாது என்றும், தமிழ் நாட்டுக் கவர்னரும் தமிழில் கையெழுத்து இடவேண்டும் என்றும் ஆன இடுவேன்.-- -தம்பிக்கு 45. பச்சையப்பர் மரபினர் "பச்சையப்ப முதலியார் ஏழையாய்ப் பிறந்து வளர்ந்த வர். நாற்பது வயதிற்குள் பெருஞ் செல்வராய் விளங்கிப் பெரிய பெரிய தருமங்கள் பலவற்றைச் செய்து முடித்தவர். இப்படிப்பட்டவரின் பெயரைச் சொல்ல மக்கள் இல்லை; மரபினர் இல்லை என்று பலர் கூறுகிருர்கள். ஆனல் எனக்கு அது பொருத்தமாகப்படவில்லை. இந்தக் கல்லூரியிலும் (பச்சையப்பன் கல்லூரி) அவரது மற்றக் கல்வி நிலையங்களி லும் படித்து வெளியேறுகிறவர்கள் யார்? ஆண்டு தோறும் நூற்றுக்கணக்காக, ஆயிரக் கணக்காகப் படித்துச் செல்லும் மாணவர்கள் யார்? அவர்கள் எல்லோரும் பச்சையப்பன் மரபினர் அல்லவா?” -பச்சையப்பர் II.3