பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. பழைய அனுபவம் "வாழ்க்கையின் படிகள் பல. காதல் கொண்டு ஒருவனும் ஒருத்தியும் ஒன்றுபட்டு இல்லறம் மேற்கொள்வது வாழ்க்கைப் படிகளுள் ஒன்று ஆகும். அதனையே வாழ்க்கையின் அடிப்படை என்பாரும் உளர். அத்தகைய சிறப்புடைய காதலை வளர்த்து வாழ்க்கையில் வளர்த்து பண்பட்டவர்கள், பிறகு ஒரு காலத்தில் தம் பழைய காதல் அனுபவத்தைத் திரும்பி நோக்குதல் உண்டு. அப்போது அந்தப் பழைய அனுபவம் எவ்வாறு தோன்றும்? ஒவ்வொருவரும் சிறுவராக இருந்து விளையாடியபோது மணல் வீடு கட்டினர். நடைவண்டி ஒட்டினர். காற்ருடி விட்டனர். சடுகுடு ஆடினர். மற்றச் சிறுவர்கள் மணல் வீடு கட்டும்போதும், நடைவண்டி ஒட்டும் போதும், காற்ருடி விடும்போதும், சடுகுடு ஆடும்போதும், வளர்ந்தவர்கள், அந்த விளையாட்டுக்களைப் பார்க்கின்றனர், வேடிக்கையாகப் பார்த்து மகிழ்கின்றனர். உள்ளம் பண்பட்ட சான்ருேர்கள், அந்தச் சிறுவர்களின் மணல் வீட்டையோ, நடைவண்டியையோ வெறுப்பதே இல்லை, தம்மை மறந்து கண்டு களிக்கும் நெஞ்சம் பெற்று மகிழ்கின்றனர். இளைஞர் களின் ஒழுக்க நெறி பிறழாத காதல் வாழ்வையும் சான்ருேர் கள் அவ்வாறே நோக்குகின்றனர். கற்பனை வளம் பெற்ற சான்ருேர்கள் அவ்வாழ்வைப் பாட்டாகப் படித்துப் பிறரும் நோக்கி மகிழுமாறு தருகின்றனர்.” -கடைவண்டி 47. பழைய படிக்கு வரவேண்டும் "உடல் இன்பம் எளிதில் வெறுப்பாய் மாறுவது, பால் சோறு இன்பமாய் உண்பவனுக்கு நாள்தோறும் அது கிடைத் தால் அது துன்பமாய் மாறும் இன்ைெருபடி உயர்ந்தது கிடைத்தால்தான் அவன் இன்பம் அடைவான். எழுபதாவது படியில் உள்ளவன் எழுபதில் நிற்றலும் துன்பம், அறுபத் தொன்பதுக்கு இறங்குவதும் துன்பமே. ஆனல் அறுபதாம் படியில் உள்ளவன் அறுபத்தொன்ரும் படியை நோக்கி ஏங்கு 114