பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வான், அது கிடைத்தால் இன்புறுவான். ஆதலால் உடலின்பம் குன்ருமல் இருக்கவேண்டுமானல் எளிய வாழ்க்கை வாழ்ந்து குறைந்த அளவிலே நிற்கவேண்டும். தேவையானபோது அடுத்த மேற்படியை எட்டி, உடலைத் திருப்திசெய்து விட்டு வேண்டுமென்றே பழைய படிக்கு இறங்கி விடவேண்டும்.” -அல்லி 48. பாட்டுக் கலை 'பாட்டும் ஒரு கலை; உயர்ந்த கலை. அது சொற்பொழிவு முதலிய கலைகளைப்போல கேட்டவுடனே உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்துவதும் அன்று; ஒவியம் சிற்பம்போல் தன்னே நாடினேர் எல்லோரையும் கவர்வதும் அன்று; மெல்ல மெல்ல நவில்தோறும் நயம் பயப்பது; பண்பட்ட மிகச் பிலர்க்கே பயன் தருவது. ஆயினும் இதற்கும் ஒரு தனிச் பிறப்பு உண்டு. ஒவியங்களும் சிற்பங்களும் பெற்றுள்ள வாழ் நாளேவிட இதன் வாழ்நாள் பல மடங்குமிகுதியாகும். ஒரு நாட்டின் நாகரிகச் சிறப்புக்கள் எல்லாம் அழிந்த பிறகும் அழியாமல் நிற்கவல்ல தனிச் சிறப்பு இந்தப் பாட்டுக் கலைக்கு உண்டு." -இலக்கிய ஆராய்ச்சி 49. புகழ் போதை 'பிறப்பொக்கும் எ ல் லா உயிர்க்கும்" என்னும் உண்மையை அடிப்படையாகக் கொண்டே வாழ்க்கை நிலை களேச் சமமாக அமைத்தல் வேண்டும். இது ஒன்றே உலகத்தின் ஒன்றுபட்ட அமைதியான இன்ப வாழ்வுக்கு வழியாகும். இது இல்லையானல், உலக முற்போக்குக்கு உரிய எல்லா நன்முயற்சி களும் விணுகும். பொருள் நிலையால் ஒத்த வாழ்வு அமைய வேண்டும் என்னும் கொள்கைபோலவே, புகழ் நிலையாலும் உயர்வு தாழ்வு பெருகக்கூடாது என்னும் கொள்கையும் பரவ வேண்டும். செல்வம் என்னும் முதலைவிடப் புகழ் என்னும் முதல் பெருந்தீமை செய்வதாகும் என்பதை எதிர்காலம் உணரவேண்டும். உழைப்புக் குறைந்தவர் செல்வம் சேர்ப்பது 115