பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலவே தகுதி குறைந்தவர் புகழ் மிகப் பெறுவதற்கும் உலகத்தில் வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு புகழ் பெற்றவர் தம்மையும் கெடுத்துக்கொண்டு உலக வளர்ச்சிக்கும் தடை செய்கின்றனர். அவர் பெறும் செல்வாக்குத் தவருகப் பயன் படுகிறது. அவர் தம்மைப் புகழ்வோரையே விரும்பிப் படை திரட்டிக் கட்சி எனப்போற்றி, இகழ்வார் மேல் பகைகொண்டு இன்னல் விளைக்கின்றனர். இது மெல்ல மெல்ல உள்நாட்டுக் குழப்பமாய் அரும்பி உலகப் போராய் மலர்வதாகும். புகழை ஈட்டியவர் செய்யும் செயல்களின் விளைவு இது. இவரைப் போற்றிப் புகழ் நல்கும் பொது மக்களின் நிலையும் இத்தகை யதே ஆகும்.” -தமிழ் நெஞ்சம் 50. புத்துலகத்தின் திறவுகோல் "வாழ்க்கையில் ஒவ்வொரு சிக்கலையும் எதிர்ப்படும்போது ஒதுங்கிச் செல்வதும் உண்டு; ஒதுக்கிச் செல்வதும் உண்டு. ஒதுங்கிச் செல்லும் வாழ்க்கை அச்சம் நிறைந்த வாழ்க்கை; ஒதுக்கிச் செல்வதோ அக்கரை அற்ற வாழ்க்கை. இந்த இரண்டும் பயனற்றவை. சிக்கலைத் தீர்த்து வெல்லும் வீரமே வேண்டும். அதுவே புத்துலகத்தின் திறவுகோல். அந்தத் திறவுகோலைத் தே ட .ே வ ண் டுவது ஒவ்வொருவருக்கும் கடமையாகும்.” -கி. பி. 2000 51. பெண்மை வாழ்க பெண்கள் அந்த வீட்டையும் இந்த வீட்டையும் பார்த்துக் கண்மூடி வாழ்வு நடத்த முயலக் கூடாது. தக்க வழக்கங்கள் எவை, தகாத வழக்கங்கள் எவை என்று ஆராய்ந்து கொள்ளலும் தள்ளலும்வேண்டும். வீணான ஆடம் பரங்களில் ஆசைகொண்டு பகட்டான ஆடை அணிகளுக்காக ஏங்கி அலையக்கூடாது. இளமையின் அழகை நீண்ட நாள் நிற்குமாறு காத்து நோயில்லாமல் விளங்கும் நல்ல உடலைப் 116