பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைதோறும், துறைதோறும் தமிழ் மொழியில் சிறப் பான நூற்கள் வெளி வரவேண்டும்; அத்தகைய முயற்சிகளை எடுக்கும் அறிஞர் பெருமக்களுக்கு இயன்ற அளவு, ஒத்துழைக்க வேண்டும்; எத்தகைய பெரிய இடுக்கண்கள், சோதனைகள், வேதனைகள் வந்தாலும் தமிழ் நலத்திற்காக” தமிழன் நலத்திற்காக அதனைத் தாங்கிக் கொள்ளவேண்டும் என்ற தலைமுறையின் அடியொற்றி யான் நடத்திவரும் தமிழ்ப் பணி இதழில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுக்க எண்ணினேன். இந்த எண்ணத்திற்கு உடன் ஊக்குவித்து :நூலகவியல் சிந்தனைகள்’’ என்ற இந்நூலைத் தமிழ்ப்பணி வெளியீடாகவே கொண்டு வருவதற்கு உறுதுணை புரிந் தார்கள் அருங்கலைக்கோன், நூலகக்கலாநிதி, அறநெறிச் செல்வர் அண்ணன் திரு. அ. திருமலைமுத்துசுவாமி அவர்கள். அவர்கட்கு என் இதயங்கனிந்த நன்றியும் வணக்கமும் என்றென்றும் உண்டு. இந்நூலில் டாக்டர், கலைஞர் நமது தமிழக முதல்வர் அவர்களின் எழுத்தாற்றலின் சிறப்பும், சென்னைப் பல் கலைக்கழகத் துணைவேந்தர், கல்வி நெறிக்காவலர் நெ. து. சு. அவர்களின் உயர்ந்த கருத்துக்களடங்கிய நூற்பட்டியலும், தமிழறிஞர் டாக்டர். மு. வ. அவர்களின் நூல் விவரத் தொகுதியும் சிறந்த முறையில் இடம் பெற்றிருக்கின்றன. இன்னுேரன்ன பல நல்ல சி ந் த னே க ள், நூலகவியல் துறைக்கு ஆணி வேரான கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இத்தகு நூலை வெளியிட எனக்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்கிறேன். இந்நன்னூலைப் பேரா சிரியர் அவர்கட்குக் காணிக்கை ஆக்கியிருப்பது குறித்தும் பெருமகிழ்வே. உங்கள் ஆதரவு இருப்பின் இது போன்ற பல நூற்கள் வெளியிட ஆர்வம் கொண்டுள்ளேன். இப் பணிக்குப் பொது நூலகங்களும் பள்ளி நூலகங்களும் ஆதரவு நல்க வேண்டுகிறேன். வளர்க தமிழ்! வெல்க தமிழகம்! வா. மு. சேதுராமன்