பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற முயலவேண்டும். உள்ளத்தின் பண்பைப் பறிகொடுக்கா மல் பெண்மையின் சிறப்பியல்புகளான அன்பும் அமைதியும் உயர்ந்து விளங்குமாறு முயலவேண்டும். அத்தகைய வாழ்வில் தான், பெண்மை வாழ்க’ என்று பாரதியார் வாழ்த்திய வாழ்த்தின் பயனைக் காணலாம்.” - பெண்மை வாழ்க 52. பெரிய தொண்டு "குழந்தைகளுக்கு அறநூல்களைத் திணிப்பதைவிட, அறிவுரைகளைக் கூறுவதைவிட, அவர்கள் பின்பற்றத்தக்க வழியில் நாம் வாழ்வதுதான் நல்லது என்று உளநூல்தெளிந்த அறிஞர்கள் கூறுவார்கள். அறவுரைகளும் அறிவுரைகளும் வற்புறுத்தி ஊட்டும் உணவு போன்றவை. அவை நன்ருகச் செரிப்பதில்லை. பெரியோரின் நடக்கை அப்படி அல்ல; குழந்தைகள் தாமே விரும்பி உண்ணும் பழம் போன்றது. அது. அது எளிதில் உள்ளத்தில் பதிந்துவிடும் என்பார்கள். ஆகவே பெண்கள் குளிர்ந்த உள்ளத்தோடு மலர்ந்த முகத்தோடு இனிய சொற்களோடு குழந்தைகளிடம் பழகுவார்களானல், அதுவே குழந்தைகளுக்குக் கற்பிக்கும் சிறந்த கல்வியாகும். அதுவே பெரிய தொண்டு.” -தங்கைக்கு 53. மனைவியின் அன்பு 'அன்பு நிரம்பிய இல்வாழ்க்கையில் கணவன் மனைவி யிடத்தில் செலுத்தும் அன்புக்கும் மனேவி கணவனிடத்தில் செலுத்தும் அன்புக்கும் ஈடு இல்லை. மனைவி கணவனுடைய இன்ப துன்பங்களையே தன் இன்ப துன்பங்களாக உணர் கிருள். கணவனுக்காகவே வாழ் கி ரு ள். அவனுடைய மகிழ்ச்சியால் பூரிக்கிருள். அவனுடைய கண்ணிரால் கலங்கு கிருள்." -வாடாமலர் 117