பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. மூன்று "நாம் வாழ்வதற்கு மூன்று நன்ருக இருக்க வேண்டும். ஒன்று. நம் உள்ளம். அது நன்ருக இருப்பதற்காகவே அற நெறியும் கடவுள் வழிபாடும் அமைந்தன. மற்ருென்று உடம்பு. அது நன்ருக இருப்பதற்கு நல்ல உணவும் உடையும் தொழிலும் மருந்தும் வேண்டும். மூன்ருவது, சுற்றுப்புறம். அது நன்ருக இருப்பதற்கு முன்னேர்கள் சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தினர்கள். மூட நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்தினர்கள். உண்மையின் அடிப்படை இல்லாமை யால், அவை உறுதியாக நிற்கவில்லை. இன்று சுற்றுப்புறம் நன்முக இல்லாத காரணத்தால்தான் பொது வாழ்க்கையில் அமைதியும் இன்பமும் இல்லை. அதனல் ஏழைகளும் வாடு கிருர்கள்; செல்வர்களும் வருந்ததுகிரு.ர்கள்; கல்லாதவர்களும் ஏங்குகிருர்கள்; கற்றவர்களும் துன்பப்படுகிரு.ர்கள். நாம் விரும்பில்ை உள்ளத்தை முழுதும் நன்ருக வைத்திருக்க முடியும்; உடம்பைப் பெரும் பங்கு நன்ருகக் காப்பாற்ற முடி யும். ஆல்ை, எல்லாரும் சேர்ந்து விரும்பினுல்தான், சுற்றுப் புறத்தை நன்ருக அமைக்க முடியும். அதற்கு வேண்டிய அளவு நாம் பாடுபடுவதில்லை. கொலை, வஞ்சகம், ஏமாற்றம், ஆடம்பரம் முதலானவை இந்த மூன்ருவது அமைப்புக்கு இடையூருனவை. இவற்றை ஒழிக்கும் முயற்சிக்குச் ச்மப் நெறி பயன்பட்டால் நல்லது. காந்தியடிகள், டால்ஸ்டாப் முதலானவர்கள் இந்த வகையில் நல்ல வழிகாட்டிகள், ஏதோ குறை இருப்பதைக் கண்டு பிடித்து அதற்கு மருந்து தந்த சமுதாய மருத்துவர்கள் அவர்கள்:” -வாடா மலர் 55. மூன்று விதிகள் முதல் விதி : உலகத்தில் மக்கள் எல்லோரும் வாழ வேண்டும். ஆதலால் எந்த வேற்றுமையையும் மறந்து அன்பைப் பாராட்டுங்கள். 118