பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது விதி : எங்காவது எவராலாவது குறை இருந்தால்......ஒழுங்குத் தொண்டர்க்குத் தெரிவியுங்கள். அதற்காக எவரிடமும் வெறுப்புக் கொள்ளவேண்டாம். மூன்ரும் விதி : இந்த விருந்து மனையைக் கடந்து வெளியே செல்லும்போது பொதுவுடை அணிந்து செல்லுங் கள்; பொவுள்ளம் பெற்றுச் செல்லுங்கள்.” -கி. பி. 2000 Iji 56. வருங்கால அமைப்புக்கு வித்து "தமிழ்நாடு உயர வேண்டும் என்ருல் இங்குள்ள மலையும் காடும் நிலமும் நீரும் உயர்தல் அல்ல; இங்கு வாழும் மக்கள் யாவரும் உயர்தல் என்று கருது. ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை' என்று பாரதியார் கண்ட கனவைப் போற்று. வறியவர்களைக்காணும் போதெல்லாம் இதை நினை. நீ உணவு உண்ணும் முன்பு ஒரு நொடிப்பொழுது கண்ணை மூடி இலையில் உள்ள உணவு ஏழைத் தொழிலாளிகளின் உழைப் பால் ஆனது என்று எண்ணு. வாரத்திற்கு ஒரு நாளேனும், நீ வாழும் வீடு ஏழைத் தொழிலாளிகளின் உழைப்பால் ஆனது என்று எண்ணு, நீ உடுக்கும் உடை முதலியனவும் ஏழைத் தொழிலாளிகளின் உழைப்பால் ஆனவை என்று எண்ணு. அந்த ஏழைக் குடும்பங்களில் பிறந்தவர்கள் உன்னைப்போல் உண்ண முடியவில்லை என்பதையும், உன்னைப் போல் கல்வி கற்க முடியவில்லை என்பதையும் எண்ணு. அவர்கள் உயர வேண்டும் என்று கசிந்துருகு, இன்றைய எண்ணமே வருங்கால அமைப்புக்கு வித்து; ஆகையால் எண்ணுவதால் பயன் உண்டு என்று நம்பிக்கையோடு எண்ணு,’’ -தம்பிக்கு 57. வாழ்க்கை உயர வேண்டும் "இந்த நாட்டு மண்ணுக்கு மதிப்பு உயர வேண்டுமானல், இங்கே உள்ள அறநூல்களின் பெருமைகளைச் சொல்லிக் 119