பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சிறுவர்கலச் சிந்தனையாளர் நற்பண்புகளுக்கு உறைவிடமான நமது பாரத மணித் திருநாட்டின் இளஞ்சிரு.ர்கள் அனைவரும் ஏற்றமுடன் வாழ வேண்டும் என்று எப்பொழுதும் எண்ணுகின்ற இதயம் உடை யவர்கள் சீரும் சிறப்பும் வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள். நம் நாட் டின் இளையோர் அனைவரும் இன்பமுடன் வாழவேண்டும் என் பது அவர்களது உள்ளக்கிடக்கையாகும். சீர்மிகு சிருர்களது வாழ்க்கை வளமாகஅமையவேண்டும். அவர்கள் வருங்காலத் தில் வாழ்வாங்கு வாழவேண்டும். உண்ண உணவும், உடுக்க உடையும் இருக்க இடமும் பெற்று, இன்னல் ஏதுமின்றி இனிது விளங்கவேண்டும் என்று அவர்கள் எண்ணுத நாட்கள் இல்லை என்று கூறலாம். அத்துடன் சிறுவர்கள்தம் வாழ்க்கை செழிப்புடன் விளங்குவதற்குரிய வழி வகைகளைப்பற்றி அவர்கள் சிந்தியாத நாளே கிடையாது என்று நாம் துணிந்து கூறலாம். உழைப்பால் உயர்ந்த அவ்உத்தமர் செயற்கரியன வற்றைச் செய்து முடிக்கும் சிறந்த கடமைவீரர் என்பதை நாம் அறிவோம். தம்மைப்போன்று இந்நாட்டின் இளஞ் சிரு.ர்கள், கடமை உணர்வும், கட்டுப்பாடும், கண்ணியமும் கொண்டு விளங்கின், நமது நாடு பீடும் பெருமையும் பெற்று விளங்கும் என்பது அவர்களது சிந்தனையில் முகிழ்த்த சீரிய கருத்தாகும். அக்கருத்திற்கிணங்க அவர்கள் சிறுவர்களது சிந்தனைக் குதிரையைத் தட்டி ஓடச்செய்கின்ற, அவர்களது சிந்தனையைத் துாண்டவல்ல சிறுவர் நூல்கள் பலவற்றைப் பைந்தமிழிலே எழுதி வெளியுட்டுள்ளார்கள். அந்நூல்களில் ஒரு சில சிறுவர்தம் வாழ்வியல் இலக்கியங்களாக இலங்கு கின்றன என்று கூறினும் அது மிகையாகாது. ஏனைய நூல் 122