பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களும் சிறுவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டிகளாக விளங்கு கின்றன என்று நாம் துணிந்து கூறலாம். கருத்துச் செறி வுள்ள, சீர்சான்ற சிறுவர்களை நல்லாற்றுப் படுத்துகின்ற சிறுவர் நூல்களைச் செம்மையுடன் ஆக்கி அளித்துள்ள இப் பெரியாரை 'சிறுவர் நலச் சிந்தனையாளர்' என்று செந்தமிழ் நாட்டார் அழைத்துப் போற்றின் அது மிகவும் பொருத்த முடைத்தாகும். இச் சிந்தனையாளர் பிறந்த ஊர் செங்கல்பட்டு மாவட் டத்திலுள்ள நெய்யாடுபாக்கமாகும். தந்தை துரைசாமி, தாய் சாரதாம்பாள். பிறந்த ஆண்டு 1912. மாட்சிமையுடைய மாநிலக்கல்லூரியில் உயர்கல்வி பயின்று முதுகலைப் பட்டத்தைப் பெற்ற அவர் அடுத்து, அறிவினைப்பெருக்கும் சைதை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து வெற்றி பெற்று, நாட்டிலே காணுகின்ற அறியாமை என்னும்இருளைப் போக்கி அறிவொளியைப் பரப்புகின்ற கல்விப் பணியே சிறந்த பணியெனத் தமது கருத்திலே கொண்டு, சென்னை மாநகராட்சி, மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய அவர்கள் தொடக்கத்தில் ஊராட்சி அலுவலராகவும், செய்தி இதழ் ஆசிரியராகவும் பணியாற்றியதுண்டு. திறனறிந்து கூறும் சொல்வன்மை, தெரிந்து செயல்வகை, ஆள்வினை புடைமை. மடியின்மை, ஊக்கமுடைமை, பயனிலசொல் பாமை, நடுவுநிலைமை, வினைத்துாய்மை முதலிய குறள்நெறி ளை அவர்கள் போற்றி ஒழுகிய காரணத்தால், கல்வித்துணை இயக்குநர், மாநிலக் கல்வி இயக்குநர், மாநிலப்பொது நூலக இயக்குநர், மாநில உயர்கல்வி இயக்குநர், மத்திய அரசின் கல்வி இணைச் செயலாளர், தமிழக அரசின் கல்வித் தலைமை ஆலோசகர் முதலிய உயர்பதவிகள் அவரைத் தேடி அடைந்தன. சுருங்கக்கூறின், கல்விப்பணியைக் கண்ணெனக் கொண்டு, சொல்லின் செல்வராகவும், சோர்விலாத்தொண்ட ராகவும் விளங்கி, ஆரம்பக் கல்வி வளர்ச்சிக்கு அரும்பணிகள் பல புரிந்து, உயர்தரக் கல்வியினை உயரச்செய்து, நூலக இயக்கத்தினைச் செழிக்கச் செய்து, மதிய உணவால் மழலைச் 123