பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வங்களின் மதி நலம் வளர்த்து, பள்ளிச் சிருர்கள் பாங் குடன் விளங்க சீருடைத் திட்டத்தினைச் செயல்படுத்தி, ப்ாரதம் வியக்கும் பல்கலைச் செல்வராக உயர்ந்து, பத்மபூசி பட்டம்பெற்று, இன்று அவர்கள் பழம்பெரும் பல்கலைக்கழகங் களில் ஒன்ருகிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் சீர்சால்துணை வேந்தராக விளங்குகின்ருர்கள். இவர்களுக்குச் சிறந்த உறு துணையாக விளங்குபவர்கள் கல்விச்சிறப்பும் பண்புநலனும் கொண்ட இவர்களது மனைவியார் காந்தம் அம்மையார் ஆவார்கள். கல்விப் பேரறிஞராகிய அப்பெரியாருக்கு சிறுவர் இலக் கிய வரலாற்றிலும் ஒரு சிறந்த இடம் உண்டு என்பதை எவரும் மறுக்க இயலாது. சிறுவர் நலச் சிந்தனையாளராகிய அவர்கள் கள்ளம் இல்லா உள்ளம் உடைய, கட்டிக் கரும் பனைய செல்வங்களுக்குக் கன்னித் தமிழில் எழுதி வெளியிட் டுள்ள நூல்கள் 14 ஆகும். அத்துடன் ஏனையோர்க்கும் 8 நூல்கள் எழுதி உள்ளார்கள். அவர்கள் சிறுவர் நூல்களை எழுதுவதற்குக் காரணமாக விளங்கியவன் அவர்களது துெப் வத்திரும்கன் திருவள்ளுவன் ஆவான். இதனை அப்பெரியாரே கதம்பி நில்' என்னும் நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள். "ஆங்கிலம் தெரிந்த குழந்தைகள் ப்டிக்க எத்தனை நூல்கள்; எவ்வளவு அருமையானவை.அப்பா! தமிழ் தெரிந்த குழந்தைகளுக்கும் நூல்வேண்டும். அதே தரத்தில்வேண்டும். இது மற்றவர்களுக்குச் சொல்லி நடப்ப தல்ல. நீங்களே எழுதிக்காட்டி விடுங்கள் என்று கட்டளை இட்டான் என் மகன்.' வள்ளுவன் வழிநின்று அவர்கள் நமக்கு வழங்கிய நூல்கள், பிற நூல்கள் ஆகியவற்றின் நூல் விவவரத் தொகுதி கீழே தரப்பட்டுள்ளது. நூற்பதிவுகள் நூல்களின் தலைப்பு அகர வரிசைப்படி ஒழுங்குபடுத்தப் ப்ட்டுள்ளன. நூலின் தலைப்பு, நூல் வெளியிடப்பட்ட இடம், நூல்வெளியீட்டாளர், நூல் வெளியிடப்பட்ட ஆண்டு, பக்கங்களின் எண்ணிக்கை, நூல் குறிப்புரை ஆகிய விவரங்கள் நூல் பதிவில் இடம் பெற்றுள்ளன. - 124