பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கும் இங்கும். சென்னை, நியூசெஞ்சுரி புக்ஹவுஸ், 1968. 110.ப. சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, ஜரோப்பிய நாடுகள் ஆகிய இடங்களில் செய்த சுற்றுப்பயண அனுபபவங்களைப் பற்றி சத்திய கங்கை என்னும் இதழில் வெளிவந்த தொடர் கட்டுரை. ஆறு. சென்னை, முருகன் அண்டு கம்பெனி, 1961. 16 ப. (வள்ளுவன் வரிசை, 10). வசன கவிதை. ஊர், தெரு, குழி, ஆறு, கை ஆகியன பேசப்பப்படும் பொருள்கள். கூடி உழைத்தால் கோடி நன்மை நாடி வரும் என்ற உண்மை நன்கு உணர்த்தப் பட்டுள்ளது. சிறுவர் நூல். உதிரிப்பூ: கோயம்புத்துார், கலைக்கதிர் அச்சகம், 1959. 125 படி கலைக்கதிரில் வெளிவந்த கட்டுரைகள் உதிரிப்பூ என்னும் தலைப்பில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கல்வித் தேவியின் திருவடி அர்ச்சனைக்கு உரிய உதிரிப்பூக்கள். கல்விபற்றிய கருத்துக் கருவூலம். எண்ண அலைகள். சென்னை, முருகன் அண்டு கம்பெனி, 1954. 243 L. = கட்டுரைத் தொகுப்பு. எல்லோரும் வாழ்வோம். சென்னை, நியூசெஞ்சுரி புக்ஹவுஸ், 1970. 156 Ls. உலகம் என்னும் இதழில் வெளிவந்த தொடர் கட்டுரை. எதிர் காலத்தைப்பற்றி தம்பி தங்கையரைச் சிந்திக்கத் துாண்டும் கருத்துக்கள் செறிந்த நூல். சிறுவர் நூல். 125