பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குண்டுக்கு இரையானவர். சென்னை, முருகன் அண்டு கம் பெனி, 1959. 16 ப. (வள்ளுவன் வரிசை, 4). பால் நல்லது. புளித்துப் போனல்? மதப்பற்று நல்லது. அது வெறியானல்? இதை உணர்த்த குண்டுக்கு இரையானவர் மகாத்மாகாந்தி. அவரது வாழ்க்கை வரலாறு. சிறுவர் நூல். உரையாடல். சிந்தனை மலர்கள். கோயம்புத்துார், கலைக்கதிரி அச்சகம், 1968. 133 ± 1. கட்டுரைத் தொகுப்பு. சிறுவர்களை வளர்ப்பதற்குரிய நெறிமுறைகளையும் பெற்ருேர்களுக்குரிய கடமைகளையும் பற்றிய கட்டுரைகள். சிலுவையில் மாண்டவர். சென்னை, முருகன் அண்டு கம் பெனி, 1953. ப 16, (வள்ளுவன் வரிசை. 3). உடலைத்தான் கொல்லலாம்; உண்மையைக் கொல்ல முடியுமா? இதை உணர்த்த சிலுவையில் மாண்ட ஏசுவின் கதை. சிறுவர் நூல். உரையாடல். சுதந்திரம் காப்போம் . சென்னே, முருகன் அண்டு கம்பெனி, 1965. 112 ப. கட்டுரைத் தொகுப்பு. நாட்டுப்பாதுகாப்பில் ஆசிரியர் கள் பங்கு, பள்ளிச் சீரமைப்பு மாநாடு, மேலை நாடுகளில் காணும் கல்விவளர்ச்சி முதலியன பேசப்படும் பொருள்க ளாகும். செஞ்சிலுவை தங்தவள். சென்னை, முருகன் அண்டு கம்பெனி, 1963, 16 ப. (வள்ளுவன் வரிசை, 12). செஞ்சிலுவைச் சங்கம் தோன்றக் காரணமாக இருந்த ஹென்றிடுஞட்டின் வாழ்க்கை வரலாறு. சிறுவர் நூல். உரையாடல். 126