பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெ. து. சு. அவர்களது கருத்து மணிகள் 1. ஆசிரியர்க்கு "படியாத நாட்டிலே நீங்கள் படித்தவர்கள். அறை குறைப் படிப்புள்ள நாட்டிலே நிறையப் படித்தவர்கள் நீங்கள். உங்கள் அளவிற்குப் படித்தவர்கள் இந்த நாட்டிலே பலபேர் இல்லை. ஆகவே நீங்கள் எல்லோரும் அதிர்ஷ்டசாலி கள்; நலமிகு வீணைகள். உங்களுக்கு அறிவு இருக்கிறது; ஆண்மை இருக்கிறது; பயிற்சி இருக்கிறது; முயற்சி இருக் கிறது. இவையெல்லாம் நாட்டிற்குப் பயன்பட வேண்டும்.” -அடித்தன? அணைத்தா? 2. ஆசிரியருக்கு மறுபயிற்சி "மறுபயிற்சி பெறுவது ஆசிரியருடைய விருப்பத்தைப் பொறுத்ததன்று. ஐந்தாண்டிற்கு ஒருமுறை ஒவ்வோர் ஆசிரியரும் மறுபயிற்சி பெற்ருகவேண்டும். அப்போதுதான் அவர் அடுத்த சம்பள உயர்வு பெறமுடியும். மறுபயிற்சியின் மூலம் ஆசிரியரின் மூளை துருப்பிடிக்காதபடி பார்த்துக் கொள்ளுகிருர்கள். அதற்காகத் தனிக் கல்விக் கூடங்களையே வைத்திருக்கிருர்கள்." -நான் கண்ட சோவியத் ஒன்றியம் 3. ஆசிரியரின் முதற்பணி பள்ளியிலே சிடு சிடுப்பு வேண்டா, கெடுபிடியும் வேண்டா. எங்குமே சினம் சேர்ந்தாரைக் கொல்லி. பள்ளி யிலோ அது எல்லோரையும் கொல்லும். இதை மறக்காதீர். 129