பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு நீர்ப் பாய்ச்சி நகையென்னும் ஒளியில் மட்டுமே வளர்க்க முடியும், சிறுவர் சிறுமிகளை. இத்தெளிவே ஆசிரியர் களின் மூச்சாயிருக்கவேண்டும். பழத்தைப் பறிக்க வரும் கிளிகள் போல மாணவர்கள் ஆசிரியரை நாடவேண்டும். இதுவே சரியான கல்விச் சூழ்நிலை. இதை உருவாக்குவதும் காப்பதும் ஆசிரியரின் முதற்பணி.” -எண்ண அலைகள் 4. இன்சொல் "மலருக்கு மனம்போல பணிவுடைமைக்கு இன்சொல். கட்டை வண்டியைக் கூச்சலின்றியும் ஒழுங்காகவும் ஒட்ட உதவும் கீல்போல, ஈருருளிக்கு இடும் எண்ணெய்போல, இயந்திரங்களுக்கு ஊற்றும் வழவழப்பான தனி எண்ணெய் வகைபோல இன்சொல் மக்கள் வாழ்க்கை வழவழப்பிற்குத் தேவை." -இன் சொல்; சத்ய கங்கை 5. உரிமைகளின் உயிர்காடி வ்ைவொரு சிறுவனும் சிறுமியும் போதிய உணவும் உடையும் பெறமட்டும் உரிமையுடையவர்கள் அல்லர். பருவத்திற்கேற்ற கல்விபெற உரிமையுடையவர்கள். திணிக் கும் கல்வியல்ல; தூண்டும் கல்வி: ஊக்கும் கல்வி; மகிழ்விக்கும் கல்வி தாண்டி, ஊக்குவித்து மகிழ்விக்கும் கல்விபெற எல்லோரும் உரிமை உடையவர்கள். கல்வியுரிமை, உரிமை களின் உயிர்நாடி.." -புதிய சமுதாயம் அமைப்போம்; சத்யகங்கை 6. உழைப்போம்! உழைத்துக்கொண்டே இருப்போம்! "இன்னும் எத்தனே நாள் பேசித் தீர்ப்பது? வேடிக்கை பார்த்து விளுக்குவது? கைகொட்டி, கால்கடுக்க நிற்பது? வேண்டாம் இப் பொழுதுபோக்கு. உழைப்போம் வாரீர்! 130