பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசீரணத்தையே விளைவிக்கும். அடிப்படைக் கலைகள் சிலவற்றில் ஆழ்ந்த அறிவையும் பயிற்சியையும் கொடுப்பதே பள்ளிக்கூடங்களின் வேலை. விரும்புகிற, தேவைப்படுகிற சில பல கலைகளைப் பின்னர் வீட்டிலோ, தொழிற்கூடங்களிலோ, கழகங்களிலோ, முதியோர் கல்விக் கூடங்களிலோ பெற வேண்டும். அதற்கு வாய்ப்புக்களை அமைத்து வைக்கவேண்டும். இத்தெளிவு பரவினல், கல்விச்சிக்கல்களில் பல தீர்ந்துவிடும்". -அங்கும் இங்கும் 14. கல்வியின் தரம் உயர "கல்வியின் தரம் உயர ஆசிரியரை மதியுங்கள்; போற்றுங் கள்; அல்லற்படுத்தாதீர்கள்; ஊக்கப்படுத்துங்கள்; படிக்கக் கொடுங்கள்; தொடர்ந்து படிக்கக் கொடுங்கள்; மறுபயிற்சி கொடுங்கள்; அடிக்கடி மறுபயிற்சி கொடுங்கள். மலைமேல் பெய்த மழையால் வயல்வளம் பெறுவதுபோல் கல்வியின் தரம் வளரக் காண்போம்." -சிந்தனை மலர்கள் 15. கல்வியின் நோக்கம் "கல்வியின் நோக்கம் உள்ளத்தை உருவாக்குவது; மனத்தைச் செம்மைப் படுத்துவது; சீலத்தைக் கொடுப்பது: சான்ருண்மையைத் தருவது. சான்ருேன் ஆக்குவதே கல்வியின் குறிக்கோள்; அந்தச் சான்ருண்மை இல்லாத கல்வி பயனற்ற கல்வி; கேடான கல்வி.' -பூவும் கனியும் 16. காலந்தான் காட்டும் "மக்களின் அறிவையும் ஆற்றலையும் குணத்தையும் பெருமையையும் காலந்தான் காட்டும். சிற்றறிவுள்ள மனிதன் பேராற்றல் மிக்க படைப்பின் ஆழத்தையும் அகலத்தையும் அறுதியிட்டுக் கூறமுடியுமா? தோற்றத்தைக் கண்டு மயங்கத் 133