பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் முடியும். எதிர்காலம், யார் யாருக்கு எதையெல்லாம் புதைத்து வைத்துக் கொண்டிருக்கிறதோ, யாருக்குத் தெரியும்? ஐந்து வாரத்தில் காய்ப்பதும் உண்டு; ஐந்து மாதத் தில் காய்ப்பதும் உண்டு; ஐந்தாண்டிற்குப் பிறகு காய்ப்பதும் உண்டு. இது இன்னது என்று உடனே தெரியாததால் ஆத்திரப்பட்டுப் புறக்கணித்து விடாதீர்கள். நம்பிக் கையோடும் உறுதியோடும் முழுக்கவனத்தோடும் முயற்சி செய்யுங்கள். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்பதை உறுதியாக நம்புங்கள்." -உதிரிப் பூ 17. கிருஷ்ணுபுரத்துச் செய்தி "கிருஷ்ணுபுரத்துக் கோயில் நாட்டின் நிலையை எவ் வளவு நன்ருகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அறிவும், ஊக் கமும், முயற்சியும், பொறுமையும் உடையவன் உழைத்து உரு வாக்கினன் இக்கோயிலை-இதிலுள்ள பேசாமற் பேசும் பதுமைகளை-பலநூற்ருண்டுகள் தாக்குப் பிடித்துப் புகழ் பரப்பும் கலை உருவங்களை, இன்றையத் தமிழனே சுட்ட நண் டிற்குக் காவல் இருக்கும் நரியானதோடு விழுங்குனவை விழுங்குதற்கும் உணர்ச்சியற்றவனகி விட்டான். சம்பளத் தோடு காவல் வைத்தும், காக்கவும் சுறுசுறுப்பு அற்றவகிை விட்டான். கடமையை மறந்து சொந்த நன்மைகளைத் தேடி உழலுகிருன். அவனுக்குப் பொதுச் சொத்தும், பொது நன்மையும் பாழாவதைப் பற்றிய நினைப்பே இல்லை. பொறுப் பின்மையால், அக்கறையின்மையால், விழிப்பின்மையால் அழகிய தன் மாளிகை எல்லாம் செடி முளைக்க, காடாக விட்டு விட்டான். ஆகவே அவன் அறிவில் காடு, ஒழுக்கத் தில் காடு, வாழ்வில் காடு, சமூகத்தில் காடுவளரக் காண் கிருேம்.' -உதிரிப் பூ 134