பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. கோடி கோடி நன்மை "ஊரை உயர்த்தப் பலகை கூடிச் செய்யப் பலகை கோடி செய்யப் பலகை கோடி கோடி கைகள் கூடிக் கூடி உழைத்தால் நாடி நாடி வருமே கோடி கோடி நன்மையே." -os)] 19. தமிழ் வாழ 'மொழி வளர்ச்சி அதன் இலக்கிய வளர்ச்சியிலே, நூல் வளர்ச்சியிலே இருக்கிறது. நூல் வளர்ச்சி, எழுத்தாளரின் ஆற்றலை மட்டும் சார்ந்ததல்ல. விற்பனையையும் சார்ந்தது. அதற்குப் பொது மக்களின் ஆதரவே பெரிதும் அடிப்படை, பொது மக்கள் ஆதரவு எந்த உருவிலே தோன்ற வேண்டும்? எதியோபிய மக்களும் கன்னட மக்களும் காட்டிய உருவிலே தோன்ற வேண்டும். ஆளுக்கொரு நூல் நிலையம்; திங்களுக் கொரு நூலாவது வாங்குதல். இத்தகைய புது நாகரிகம் துளிர்த்துத் தழைத்து மரமாகி விட்டால் தமிழ் எழுத்தாளர் வாழ்வர். தமிழ் வளரும்; வாழும்; வெல்லும்.” -தமிழ் வெல்லும்; எப்போது? தமிழ் உறவு 20. தமிழைப் பாதுகாக்க வேண்டும் 'மக்களிடையே வந்துவிட்ட தலைவர் கென்னடிக்குப் போதிய பாதுகாப்புச் செய்யத் தவறியது எத்தனை திங்காக முடிந்தது? அது நமக்குப் படிப்பின. அரண்மனையை விட்டு அழைத்து வந்துள்ள நம் தமிழ் அன்னையைக் காக்க மிக விழிப்பாயிருக்க வேண்டும். புதிய பாதுகாப்பு முறைகளை அறிந்து, நன்கு பயின்ற கொள்ள வேண்டும். தமிழைக் கற் பதில் எவ்வளவு ஆர்வங் கொண்டிருந்த போதிலும், வெளி நாட்டார் நம் மொழியைக் காப்பாற்றுவர் என்று ஏமாந்து விடக் கூடாது. இளைஞர்கள், அதிக விழுப்போடும், அதிக 135