பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்வத்தோடும், தேவையான அத்தனே அறிவையும் பெற்றுத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்.” # -உலகத் தமிழ் 21. தரமான கல்வி "மொழித் திறமை, பாடத் தேர்ச்சி, தன் முயற்சி, பொறுப்புணர்ச்சி, நாள் தவருமை, காலந்தவருமை, படிப்புப் பசி, தூய பழக்கங்கள், நாகரிகமான பழக்கங்கள், பணிவு, இன்சொல், ஆண்மை ஆகிய அத்தனையும் வளர்க்கும் கல்வியே தரமான கல்வி.' -எண்ண அலைகள் 22. தரமான கல்வியைப் பெற 'தரமான கல்விக்கு இடவசதி, துணைக் கருவிகள், பயிற்சிபெற்ற போதிய ஆசிரியர்கள், திருப்தியுள்ள ஆசிரி யர் சமுதாயம், பெற்ருேர் ஒத்துழைப்பு, மாணவர்களின் ஒருமனப்பட்ட ஈடுபாடு, இத்தனையும் வேண்டும். இவை மட்டும் இருந்தால் போதுமா? தலைவேறு, கைகள் வேறு, கால் கள் வேறு, உடல் வேறு என்று உறுப்புக்கள் தனித்தனியாக, உயிருள்ள மனிதனுகுமா? உயிருள்ள மனிதன் என்ருல் இவை அனைத்தும் இணைந்திருக்க வேண்டும். குருதி நிற்காமல் எல்லா உறுப்புக்களிலும் பாயவேண்டும். அதைப்போலவே ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வி, கல்லூரிக் கல்வி இவை மூன்றும் இணைந்திருக்கவேண்டும். ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அறிவுக் குருதி ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்." -ஞானத் தந்தை திட்டம்; வடசென்னை ஜார்ஜ் நகர் வட்டம் சீருடை விழாச் சிறப்புமலர் 23. தவருண பொருளாதாரம் "கற்றுக் கொடுக்க ஒவ்வொரு மாணவனையும் உற்று நோக்க வேண்டாவா? ஒவ்வொருவனுடைய எழுத்து வேலை களையும் கவனித்து வரி வரியாகத் திருத்த வேண்டாவா? அப்படிச் செய்யாமல் மொத்தமாகச் சொல்லிக் கொடுக்க 136