பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஆய்வு உதவு நூலகர் ஆய்வு உதவு நூலகர் இன்றைய நூலகங்களின் தலைசிறந்த பணிகளில் ஒன்று ஆய்வு உதவுப் பணியாகும். பொதுவாக ஆய்வு உதவுப்பணி (REFERENCE SERVICE) என்பது நூலகத்திற்கு வருகின்ற வாசகர்களுக்குரிய நூல்களைக் கிடைப்பதற்குத் துணை செய்த லும் வாசகர்கள் கேட்கின்ற கேள்விகளுக்குரிய விடைகளை அவர்கள் பெறுவதற்கு உதவுதலும் ஆகும். அத்துடன் நூலகத் திற்கு வருகின்ற அறிஞர்கள் நடத்துகின்ற ஆய்வுக்குரிய மூலங் களைத் தந்து, அவர்களுக்கு இருக்கின்ற ஐயங்களைத் தீர்த் தலும் ஆய்வு உதவுப் பணியே ஆகும், சுருங்கக் கூறின், கற்ருர், கல்லாதார், சிருர், முதியவர், அறிஞர்கள், ஆராய்ச்சி யாளர்கள், விஞ்ஞானிகள், தொழில் விற்பன்னர்கள், கவிஞர் கள், கதையாசிரியர்கள், சமயவாதிகள், சாத்திரங்கற்ருேர், அரசியல்வாதிகள், அருளுடையாளர்கள், சீர்திருத்தவாதிகள், செல்வச்சீமான்கள், ஏழை எளியவர்கள் ஆகிய அனைவரும் அவ்வப்பொழுது விரும்புகின்ற செய்தி விளக்கங்களையும், விவரங்களையும் அளித்தலே ஆய்வு உதவுப்பணியாகும். இப் பணியினைச் செய்கின்ற நூலகத்தின் பகுதி ஆய்வு உதவுப் uGjá (REFERENCE DEPARTMENT or section) grairip கூறப்படும். இப்பணியின் பொறுப்பினை ஏற்று நடத்துகின்ற IĘTavstř =2, čia e-5 aj GT so 3, † (REFERENCE LIBRARIAN) ஆவார். - ஆய்வு உதவு நூலகர், தாம் பெற்றிருக்கின்ற அறிவின் அடிப்படையில் பல நிலைகளில் விளங்குகின்ற மக்கள் அனை வரும் தொடுக்கின்ற வினுக்களுக்குரிய விடைகளை அவ்வப் பொழுது தயக்கம் ஏதுமின்றித் தரவேண்டும். அது அவரது தலையாய கடமையாகும். அதற்கு அவர் நிறைந்த கல்வி அறிவு உடையவராக உயர்ந்து விளங்க வேண்டும். அவருக்குக் குறைந்த அளவு இருக்க வேண்டிய தகுதி, பொதுக் கல்வியில் ஒரு பட்டமும், நூலகவியற் கல்வியில் ஒரு பட்டமும், பெற்ற வராக இருத்தலே ஆகும். பொருள் வளம் இல்லாத நூலகங்