பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டு விட்டால் சிலர் தேறுவர்; பலர் தவறுவர். பணமும் உழைப்பும் வீணுகும். எல்லோரையும் தேறவைக்கத் தனிக் கவனம் தேவை. தனிக் கவனத்திற்கு ஆசிரியருக்கு மாணவர் எண்ணிக்கை அடக்கமாயிருக்க வேண்டும். மாணவர் வீதத்தை அதிகப்படுத்தி ஆசிரியரை மிச்சப்படுத்துவது தவருன பொருளாதாரம்." -கான் கண்ட சோவியத் ஒன்றியம் 24. தொடர்ந்து படி "இவரைப் போல் (இராமானுசத்தைப் போல்) தொடர்ந்து படி; விடாது படி. சலிக்காமல் படி. நேரம் கிடைத்த போதெல்லாம் படி; ஒன்றிலே குறைந்தாலும் மற்ருென்றிலே உயர்ந்து விடுவாய்." --தோற்றும் வென்றவர் 25. கட! கட.! நட! “ஒன்றே குலம் என்னும் மக்கள் சமுதாயத்தை உருவாக்கத் துணிந்துவிடு; அவ்வழி நட; விழிப்பாக நட: ஊன்றி நட; வழி தவருமல் நட. சாதிப்பற்று என்கிற நச்சுப் பொய்கையில் இறங்காமல் நட...இந்தியர் என்கிற தெளி நீரைப் பருக நட." -எல்லோரும் வாழ்வோம் 26. கல்ல வாழவு "ஆள் மனத்தோடு நில்லாமல், குடும்ப மனத்தோடு தேங்காமல், ஊர் உள்ளத்தோடு கருகிப் போகாமல் உலக உள்ளமாகக் கனிந்தால் நல்ல வாழ்வு வாழலாம் என்பதில் ஐயமில்லை." ட வையம் வாழ்க 27. நல்லாசிரியர் "ஒல்லும் வகையெல்லாம் மாணவர்களை ஈடுபடுத்தி, அவர்களையே தேடவைத்து, அவர்களையே காணவைத்து, 137