பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களையே குறிக்கவைத்து, அவர்களையே கற்க வைப்பவரே நல்லாசிரியர்.” -எண்ண அலைகள் 28. கல்வழி 'நட்ட பயிரைச் சுற்றிப் பார். நல்லபயிரை ஆய்ந்து பார். விளையும் பயிரைத் துரண்டிப்பார். விளைச்சல் நிறையக் காண்பாய். ஊர்தோறும் உரைப்பாய். சிறந்து எங்கும் வளர்ப்பாய். இதுவே வளர்க்கும், உயர்த்தும் வழி. புதுவழி. நல்வழி.' -வுைம் வாழ்க 29. காட்டின் இதயம் 'பள்ளிக் கூடம் நாட்டின் இதயம். அது எங்கோ அந்த ரத்தில் வேலை செய்கிறதா? இல்லை. சமுதாயத்தில் இயங்கு கிறது, சமுதாயத்தால் இயக்கப்படுகிறது. அப்படியானல் பள்ளிக்கூடம் யாருக்காக இயங்க வேண்டும்? சமுதாயத்திற் காக இயங்கவேண்டும். அதாவது, சமுதாயத்தின் தேவை களை நிறைவேற்ற வேண்டும்.” -சுதந்திரம் காப்போம் 30. காட்டின் உயிர்காடி "ஒரு நாட்டின் இதயம் பள்ளிக்கூடம். சரி, நாட்டின் உயிர் நாடி யார்? இதயமாகிய பள்ளிகளை இயக்குபவர்கள் தானே? எனவே ஆசிரியர்களே உயிர்நாடி என்பதைக் கூறவும் வேண்டுமா? அவர்கள் நிலையே நாட்டின் நிலை. அவர்களிடம் நாட்டுப்பற்று மிகுந்திருந்தால் நாட்டு மக்களிடமும் நாட்டுப் பற்று மிகுந்திருக்கும். அவர்களிடம் தியாக உணர்ச்சி நிறைந்து இருந்தால் நாடு முழுதும் தியாக உணர்ச்சி பரவி இருக்கும். ஆசிரியர்கள் வெறும் உபதேசிகள் மட்டும் அல்லர்; சிறந்த வழிகாட்டிகள்.” -சுதந்திரம் காப்போம் 138