பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. க்ேகுப் போக்கு வேண்டும் "மாந்தருக்கு என்று ஒரு பொது இயல் குறிப்பது சரி. அப்பொதுஇயல் ஒவ்வொருவருக்கும் அப்படியே பொருந்தும் என்பது சரியன்று. ஒவ்வொரு ஆணும் பெண்ணும், அப் பொது இயலிற்கு முன் பின்னக, தனி இயல் உடையவர். கல்விக் கூடங்களின் வேலை, சாலை போடுவது அன்று; துணி நெய்வது அன்று; ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் முழு வளர்ச்சி அடையச் செய்வது. ஆகவே தனித்தனி இயல்பிற் கேற்ப, நீக்குப் போக்கிற்கு இடமிருக்க வேண்டும்.' -சிந்தனை மலர்கள் 32. நூல் கிலையம் 'பள்ளிக் கூடங்களும் கல்லூரிகளும் மட்டுமே அறிவு வழங்கும் நிலையங்கள் என்று கருதிவிடாதீர்கள். அவற்றிற்கு அப்பால் அறிவுக் கூடங்கள் இல்லையென்று ஏமாந்து விடாதீர் கள். கல்வி நிலையங்கள் கல்விச் சீட்டுத்தேடும்:இடங்கள். கல்வி யறிவு வளர்க்கும் நிலையங்கள், நூல் நிலையங்களாகும். 'கல்வி கரையில’. எனவே காலமெல்லாம் கற்கவேண்டும். வாழ்நாள் முழுவதும் கற்கவேண்டும். அதற்குத் துணை நூல் நிலையம்... அறிவுத் தேரின் ஒரு பக்கத்துச் சக்கரம் கல்விக் கூடம். மறுபக் கத்துச் சக்கரம் நூல் நிலையம். இரண்டும் நன்ருகப் பொருந் துவதாக." -எல்லோரும் வாழ்வோம் 33. நூல் வெளியீடு 'நூல் வெளியீடு இங்கு (சோவியத் ஒன்றியம்) ஒரு வாணிபமல்ல. மக்களது படிப்புப் பசியைப் பயன்படுத்தி, தனியார் யாரும் நூல் வெளியீட்டு வாணிகம் செய்து குவிக்க முடியாது. நூல் வெளியீட்டுப் பணி பொதுத்துறையில் உள்ளது. நூல் வெளியீட்டிற்காக, ஒவ்வொரு குடியரசிலும் பொதுத்துறை அமைப்பு உண்டு. அவை அரசினரால் அமைக்கப்பட்டாலும் தன்னுரிமை பெற்றவை. பல்துறை 139