பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேதைகளைக் கொண்டவை. இலாபக் கண்னேட்டம் அற்றவை.’’ -அங்கும் இங்கும் 34. பணம்-அன்றும் இன்றும் 'முன்பெல்லாம் நூறுபேர் வீட்டிலும் அலமாரியில் பதுங்கியிருந்து செலவான பணம், இப்போது நூறு வங்கிக் கணக்கில் இருந்து கொண்டு மெல்ல மெல்ல முறையாகச் செலவாகிறது. இரண்டு செலவு வகைக்கும் வேற்றுமை உண்டு. வங்கியில் சேர்ந்து வேண்டியபோது, வேண்டிய அளவு மட்டும் வெளிவரும் பணம் நாட்டின் பொருளாதாரக் குருதி ஒட்டத் தைக் குறைப்பதில்லை. மாருகக் குருதி ஓட்டத்தை இயக்கும். வீட்டுக்கு வீடு பதுங்கிச் செலவாகும் பணம் நாட்டுப் பொருளாதாரக் குருதியைப் பல இடங்களில் உறைய வைக்கிறது, -நல்ல போக்குகள்; சத்ய கங்கை 35. பதிவு 6ாடாச் சுருளும் பகுத்தறிவும் "பதிவு நாடாச் சுருள் பகுத்துணராது; நல்லது கெட்டது அறியாது; கொள்ள வேண்டியவை இவை, தள்ள வேண்டி யவை அவை என்று பகுத்துச் செயல்படாது. கேட்பதை யெல்லாம் அப்படியே அதே ஒலியில் பிடித்து வைத்துக் கொள்வது பதிவு நாடாவின் தன்மை. அது சடப்பொருள்: அறிவற்ற ஒன்று. மனிதன், ஆறறிவுள்ள மனிதன் அந்நிலைக்கு வீழ்ந்து விடக்கூடாது. தன் சொந்த அறிவைக் கொண்டு, கேட்டதை.கவனமாகக் கேட்டதை, சிந்தித்துச் சிந்தித்து, ஆய்ந்து அதன் உண்மையைக் காணவேண்டும். நல்லதுபோல் தோன்றும் தீயதாயின் அதைக் காணும் நுட்பம் பெற வேண்டும். சிந்தித்துத் தெளிவு பெற்ற அறிவு, கிணற்று நீர் போலத்தேங்கி நிற்காது. பின் என் செய்யும்? பாய்ந்து ஒடும்." -கல்வியும் அறிவும்; தமிழ் உறவு 140