பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. மகனின் கட்டளை "ஆங்கிலம் தெரிந்த குழந்தைகள் படிக்க எத்தனை நூல் கள்! எவ்வளவு அருமையானவை அப்பா. தமிழ் தெரிந்த குழந்தைகளுக்கும் நூல்கள் வேண்டும். அதே தரத்தில் வேண்டும். இது மற்றவர்களுக்குச் சொல்லி நடப்பதல்ல. நீங்களே எழுதிக் காட்டி விடுங்கள். முதலில் சாக்ரடீசு,இயேசு, காந்தி ஆகியவர்கள் வாழ்க்கையை எழுதுங்கள் என்று கட்டளையிட்டான் என் மகன் கா. சு. திருவள்ளுவன்.' -தம்பி! கில் 43. மனப்பாடம் "மனப்பாடம் செய்வதிலும் ஒப்புவித்தலிலும் பாலர் பருவத்திலேதான் பற்று. அப்போதுதான் திறமை உச்சம். பருவத்திலே ஆண்டு முழுவதற்குமான ஊறுகாயைப் போட்டு வைத்துக் கொள்வதுபோல மனப்பாடம் எளிதில் செய்யக் கூடிய இளம் பருவத்தில், வாழ்க்கை முழுதிற்கும் பயன்படக் கூடிய அளவு மனப்பாடம் செய்து வைத்துக் கொள்வதுதான் அறிவுடைமை." -உதிரிப் பூ 44. மனித வாழ்வைக் கொடுப்போர் "பெற்ருேர் உயிரையும் உடலையும் கொடுத்தோர். மனித வாழ்வைக் கொடுப்போர் யார்? நல்லாசிரியர்களே. அவர்களே மனிதனுக வாழக் கற்றுக் கொடுப்போர். அவர்கள் அறிவுக் கண்களைத் திறந்து, அவற்றின் மூலம் உலகியல் அறியவும், உளவியல் உணரவும், சமுதாய இயல் தெளியவும், ஒழுக்க நெறி நிற்கவும் நமக்குத் துணைபுரிகிருர்கள். நல்லாசிரியர்கள் இல்லையேல் நாடும் காடும் ஒன்றே." -புதியதோர் உலகம் செய்வோம்; சத்ய கங்கை 143