பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. மானிட அறிவு வானம் அளந்தது அனைத்தையும் அளந்திடும் ஆற்றல்; நிலமகளின் அடிவயிற்றில் அடங்கிக் கிடக்கும் பொன்னேயும் மனியையும் குடைந்தெடுத்து வந்து கொட்டும் நுட்பம்; "உயிரே இழப்பினும் நெறியோ தவறேன்’ என்கிற நாகரிகத் திட்பம், ஆணி அடித்துக் கொல்லும்போது, "தந்தையே அவர்களை மன்னியுங்கள். அவர்கள் தாங்கள் செய்வது என்ன வென்று அறியாதிருக்கிருர்கள், என்னும் கரையிலாக் கருணை; அடித்தடித்து விரட்டினலும் சொல்ல வேண்டியதைச் சொல்லிக் கொண்டேயிருந்த உறுதி, 'கொல்லவேவரினும் வெறுக்கவே உடன்படேன்’ என்னும் அறப்பெருக்கு இத் தனக்கும் மூலம் எது? மானிட அறிவு." -கல்வியும் அறிவும்; தமிழ் உறவு 45. முதற்பணி "களையெடுக்க எடுக்க, பயிர் செழித்து வளரும். சாதிப் பூண்டுகளைக் களையக் களைய தமிழ்ச் சமுதாயம் பச்சென்று செழித்து வளரும். சாதிப் பூண்டுகளைக் களைவது நம் தலையாய கடமை. தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்குவதற்கு அதுவே முதற்பணி; தேவையான பணி, காலந்தாழ்த்தாது செயய வேண்டிய பணி.' -புதிய சமுதாயம் அமைப்போம்; சத்ய கங்கை 47. முதியோர் கல்வி "முதியோர் கல்வியோ நாம் நினைப்பதுபோல் முதற்கல்வி யாக இல்லை; தொடர் கல்வியாக இருக்கிறது. தாய்மொழிப் படிப்பாகவும் நிற்கவில்லை. ஒன்றிய மொழிப் படிப்போடும் தேங்கவில்லை, பிறமொழிப் படிப்பாகவும் கிளைக்கிறது. இங்கன்ருே வீடுதோறும் கலையின் விளக்கம் இருக்கும்.’’ -நான் கண்ட சோவியத் ஒன்றியம் 144